இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


“பாஸ்”என்கிற பாஸ்கரன்

            

மடியில் தவழும்
மழலையாயிருந்தபோது -என்னை
அம்மா அழைத்தாள். அன்போடு..
பாஸ் குட்டி

கண்ணா மூச்சி விளையாட்டில்
கண்கள் கட்டி ஒளியும்போது
கைநீட்டி தேடி
நண்பன் அழைத்தான். நட்போடு..
பாஸ்கர்

அரும்பு மீசை அரும்பிய வயதில்
ஆருயிர் தோழன்
அருமையாய் அழைத்தான்.தோழமையோடு 

பாஸ்கரா

கவின்மிகு கல்லுரிப்பருவத்தில்
கைகோர்த்து கும்மாளமிட்ட
நண்பர்கள் கிண்டலுடன் .. 

பாஸ்கி

கவிதை எழுதும் காதல் பருவத்தில்
கண்கள் மயங்கி
காதலி அழைத்தாள் காதலோடு.. 

பாஸ் கண்ணா

பணிபுரியும் இடத்தில்
பழகிய தோழர்கள்
பாங்காய் அழைத்தனர் பணிவோடு ... 

பாஸ்

ஒவ்வொரு நிலையிலும்  என்னை
நெருங்கியிருந்தவர்கள்.. தற்போது  
தொடர்பற்றுசில காலம் மறந்திருக்கலாம்..
இந்த“பாஸ்கரனை.

    'அவர்களின் நினைவுகளில் மீண்டும்
ஒருமுறை  நான்  பூத்திருப்பேன். - உங்கள் 
பாஸ் என்கிற பாஸ்கரன்என்ற படத்தின்  
தலைப்பின் மூலமாக.
அதற்கு என் நன்றிகள்..டைரக்டர் ராஜேஷ்
என்றும் அதே அன்பு,நட்பு,பாசம்
கவிதை,காதல்,பேச்சு,சிரிப்புடன்
அவர்களின் நினைவுகளோடு..
        பாஸ்கரனாகிய..நான்

காதலித்து பார்..!– சூர்யா




கண்திறந்து கனவு காண்பாய்..!
சாலையில் மிதந்து செல்வாய்..!

உலகம் கவிதையாய்  மாறும்..!- உன்
உள்ளம்  சிறகாக மாறும்..

கல்லும் சிலையாய் மாறும்..!- உன்
சொல்லில் இனிமை சேரும்..!

பூக்களின் மென்மை புரியும்..!
பட்டுப்பூச்சி ஓவியமாய் தெரியும்..!

நெஞ்சில் நடுவில் இன்ப பூகம்பம் பூக்கும்.
இதயத்தின் துடிப்பு இரட்டிபாக்கும்..!

வேதனைகள்  நீ மறப்பாய்..!பெற்றோர்
போதனை யும்  நீ துறப்பாய்..!

உலகம் உன்னைச் சுற்றும்..! உன்
உளறல்கள் உனக்கு பிடிக்கும்.!.

நண்பர்கள் தொலைந்து போவார்கள்..!
நாளை என்பது  தென்படாது..!

நடுஇரவில் உன்தூக்கம் போகும்..! உன்
நடையில் பெண்மை தவழும்..

கணினி உந்தன் தோழன் ஆகும்..
அலைபேசி உன் உயிராகும்..

மொத்தத்தில் நீ அழகாவாய்...
காதலித்து பார்...காதலை..

                                               
                     

நன்றியுடன் நான்


'உயிர்' கொடுத்த தந்தைக்கும்-நன்றாய்
'உரு' கொடுத்த தாயுக்கும்
'தமிழ்' கொடுத்த தமிழாசிரியர்களுக்கும்
'உற்சாகம்' கொடுத்த உறவினர்களுக்கும்
'பாராட்டு' தந்த நண்பர்களுக்கும்
'காதல்' தந்த கண்மணிக்கும்
'ஏக்கம் தந்த சமுதாயத்திற்கும்
சந்தர்ப்பம் தந்த ஈகரைக்கும்
கவிதைகளை பாராட்டி"சிறப்புக்கவிஞர்"பட்டம்
தந்து வளர்த்த ஈகரை உறவுகளுக்கும்
என் தாய்நாட்டிற்கும்,நான் தங்கியிருக்கும்
சிங்கப்பூர் நாட்டிற்கும்..
என்னை வளர்க்க போகும் உங்களுக்கும்.
அன்புகலந்த நன்றியுடன்..
உங்கள்..
-தேனிசூர்யாபாஸ்கரன்.

விதவை




காலங்கள் செய்திடும் கோலங்களில்
கறைபட்டு போன கன்னிகள்.....


பூப்பூக்கும் நந்தவனத்தில் இனி...
பூவே பூக்காத காலம்...


மேகமில்லா வானத்தில் சூரியன்.. இனி...
வரமுடியாத நேரம்..

இதுவல்ல
உங்களின் விதி?..

நீங்கள் நகருகின்ற சுவர்களாக ....
நாள்தோறும் இருந்தது போதும்...


நீங்கள்
உணர்ச்சியற்ற உள்ளங்களுக்கு..

ஒடுங்கியிருந்தது போதும்!...


புதியதோர் சகாப்தம் படைக்க...
புறப்படு பெண்ணே.. புறப்படு...

நீங்கள் கையெழுத்திட்டால்...
கான உலகமும்

இயங்குகின்ற நேரமிது..


நீங்கள் தரலாம் பலருக்கு வாழ்வு அதை
நிச்சயம் உலகம் ஏற்கும்...

என் காதலிகள்..

என் பேனாவை அழவைத்த
   காதலிகள்...கவிதைகளாய்..



   என் நினைவை நெகிழவைத்த
   காதலிகள்...கவிதைகளாய்..


   என் இதயத்தை இடம் பெயர்த்த
   காதலிகள்...கவிதைகளாய்..



   என் இரு விழியை இருட்டாக்கிய
   காதலிகள்...கவிதைகளாய்..

இறை கீதம்






எந்தன் இறைவா!..
எய்யும் அம்பு உன் மீது விழுந்தாலும் –மற்றவர்கள்
எய்யும் அன்பு உன் மீது விழுந்தாலும்-
எல்லாம் நன்மைக்கே..என பொறுமையாக இரு
என்று நீ கூறியதை
என் மனதில் வைத்து வாழ்கிறேன் ...மனிதனாக.

தமிழின் முன்னுரை


அன்னையே...நீ.. அதிசயங்களின் பாசறை
அன்பின் கருவறை..என் அழகுத் தமிழின் முன்னுரை..

கண்ணுக்கு தெரிகின்ற கடவுள் நீ தானே..! சில நிமிடம் நான்காணாமல் போனாலும் கண்உறக்கம் இழப்பவள் நீ தானே..!

ஐந்திரு மாத கருவறையில் என்னை காத்தவள் நீ தானே..! என் ஐம்புலன் நலமின்றியும் எனை அழகனென்பவள் நீ தானே..!

மழலையாய் செய்த தவறை மகிழ்வோடு ரசித்தவள் நீ தானே..! இன்றுமமதையால் நான் செய்த தவறால் என்னோடு கலங்குபவள் நீ தானே..!

பயணங்கள் தரும் சோகங்களில் நிழலாய் தொடர்பவள் நீ தானே..!
பயன்படாதவன் ஆனாலும் பாசமாய் இருப்பவள் நீ தானே..!

கல்லில் தடுக்கி விழுந்தபோது அந்த கல்லை அடித்தவள் நீ தானே..!
கண்ணீல் தூசு பட்டால் கலங்குபவளும் நீ தானே..!

வேலையின் தாமதத்தில் சில நிமிடம் ஆனாலும்
வீட்டுக் கதவின் நிலையாய் மாறுபவள் நீ தானே..!.

உண்மையன்பு ஊறுகின்ற ஊற்று நீ தானே..!
உனக்கு உதவாதவன் நானாலும் என்
உச்சிமுகர்ந்து மீது முத்தம் தருபவள் நீ தானே..!

தொலை தூர பயணத்திலே என்னோடு
திருநீறாய் வருபவள் நீ தானே..! அந்த திருநீறும்
கண்ணில் பட்டு கலங்கிடுமோ கண்..? என அதை ஊதி கலைத்தவள்.. நீ தானே..!

அன்போடு,தமிழ்ப்பண்போடு,தேசப்பற்றோடு என்
தேகத்தை வளர்த்தவளே..! இது உனக்கான 
முன்னுரையும் ..எனக்கான முகவுரையும்...

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.