இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


எப்படி நுழைந்தாய்..எனக்குள்ளே..?


எப்படி நுழைந்தாய்..எனக்குள்ளே..?
என்று நான் கேட்கும் முன் நீ..கேட்கிறாய்..
இங்கே முதலில் நுழைந்தது..
நீயா.?! இல்லை..நானா..?!

என்னுள் நீ நுழைந்தது..
மண்ணுக்குள் நுழைந்த
மழை நீரைப் போலவா..?!
இல்லை...
நான் உன்னுள் நுழைந்தது..
மாம்பலத்தில் நுழைந்த
கூன் வண்டு போலவா..?!

என் வார்த்தை வரிகளின்
தவறுகளை நீ திருத்தும் போது..
என் வாழ்வின் வரிகளும்...
உன் திருத்தல்களால்..அழகாய்..

உனக்குள் நான் இருப்பதை நீ
உன் இதழ் வார்த்தையால்
உலகிற்கு தெரிவிக்கா விட்டாலும்..
உன் உள்ள(ம்) உதடு சொன்ன ஒரு
வார்த்தையில் நான் தெரிந்தேன்..
அதில் திளைந்தேன்..நான்.

நீ சொல்லாவிட்டால் எனக்கென்ன..?
உன் இமைகின்ற கண்கள் சொல்லுதடி...
இது போதும் இவனுக்கு..
இவ்வுலகில் பிறந்ததற்கு..

என் வசந்தத்திற்கு என்றும்
தொடரும்..புள்ளியாய்..நீ
என் வாழ்வின் மொத்தத்திற்கும்
முற்றிர்க்கும் முற்றுப்புள்ளியாய் நீ..

காதல் ஜோதி
மனமில்லா மனிதா.!


மனம் கொள்ளும் காதல் பற்றி

அறிவாயோ..நீ..!..
அச்சடிக்கப்பட்ட காகிதத்திற்காக
ஆசைகளை சுமந்து வரும்
அரும்புகளை கிள்ளி விடாதே!..

மதம் எனும் மதம் பிடித்த நீ
மனம் கொண்ட காதலை..
மண்ணோடு மாய்த்து விடாதே!..
              
ஜாதி என்ற சாக்கடையில்
புரளுவதை நிறுத்தி விட்டு
காதலுக்கு ஜோதி ஏற்று!..

அந்த ஜோதி எண்ணையிட்டு
எரியும் விளக்காக இருக்கக்கூடாது!..

உனை உள்ளம் உள்ள மனிதனாக...
உலகிற்கு காட்டும் உன்னதமான..

உயர்ந்த ஜோதியாக இருக்கட்டும்..!

அயல்தேச அனுபவம்..வறுமையை தோண்டி..அடியோடு
புதைத்திட வேண்டி..வளமையை..
வாழ்வில்..இணைத்திட வேண்டி..  
               
கரைகளை தாண்டி..வாழ்வில்
கரையேற வேண்டி..
கடல் கடந்து வந்தோம்..!
கனவோடு வந்தோம்..!  

ஒட்டிக்க்கிடந்த பாசத்தை.
வெட்டிக்கொண்டு வந்தோம்..
கட்டு கட்டாய் பணம் கிடைக்கும்
என மதியிழந்து பிரிந்தோம்..!
  
இயந்திரத்தின் இதயமாகி
இரவும் பகலும் உழைத்தோம்..
இலட்சியத்தை அடைய தினம்
செத்து செத்து பிழைத்தோம்..!
  
பணமொன்றை கண்டோம்.அதை
தின்று பிணமாகிப்போனோம்..
மனமொன்றை புரியாமல்
ஈனமாகி வாழ்ந்தோம்..!

கைநிறைய பணமிருந்தும்
மனம் வறுமையோடு கிடந்தோம்...!
பந்தங்களும் பாசங்களும்
தொலைக்க கிடைத்த பணம்.
நம் கையில் என அறிந்து
வெட்கித் தலைகுனிந்து
கூனிக்குறுகி நின்றோம்..!
 

பெண்ணின் பசுமை நினைவுகள்..


கருவறையில் நான் செய்த..வன்முறையை -என்
கருத்தம்மாவின் பொற்காலம் என அவள் சொன்னதுண்டு.

தவழும் மழலையாய் நான் தாவி ஏறிய நெஞ்சை தடவி   தந்தையும் அதை பொற்காலம் என சொன்னதுண்டு.
அப்படியே நானும் இருந்திருக்கலாமோ.!?
          
ஆற்றுப்படுகையிலே ஊற்றுத் தோண்டி களித்ததும்         
கிணற்றுக்கரையிலே தோழியோடு ஆடி குளித்ததும்
நெஞ்சை விட்டு நீங்கிடுமோ...?
          
பருவமெய்திய வயதில்..எந்தன்..         
பெண்மையோடு புதிதாய் நாணமும்...ஒட்டிக்கொள்ள
பெரியவள் ஆணேனோ..? என்று என்னை எண்ணி
பிரமித்த தருணங்கள் விலகிடுமோ..?    
          
மனம் புரியா பருவத்தில் துளிர்ந்த ஈர்ப்பு காதலும்-அது
மடத்தனமென உரைத்த குடும்ப பாசமும்...மறக்க முடியுமோ..?

இளவயதில் அன்பை எனக்குள் கொட்டிவனோடு திருமணமும்.
இரு உயிர்க்குள் ஒரு உயிர்ப்பூ பூத்திட்ட நேரமும்..
இதயத்தை விட்டு... என்றும் இடம் பெயர்ந்திடுமோ..?
             
தடி ஊன்றி நடக்கின்ற இந்த தள்ளாத வயதிலே..என் மேல்
தாளாத..தணியாத அன்பு முத்தம் பொழிபவனே..!என்னவனே..!
மீண்டும் கிடைத்திடுமோ..? இன்னொரு மானிடவாழ்வு..?
மாண்டு மீண்டுப் பிறந்திடுவேனோ...? இந்த உலகிலே..!  

மீண்டும்..மகாத்மா..?!!

தாயின் கருவறையில் வளரும்..கருவிலும்..,

மாசற்ற தாய்ப்பால் குடிக்கும்..குழந்தையிலும்..

தவழ்ந்து நடக்கும்  மழலையிலும்...,

தாவி விளையாடும் சிறுவர்களிடமும்..,


நேர்த்தியாக சிந்திக்கும் இளைஞர்களிடமும்..

எத்தனையோ.. மகாத்மாக்கள்  ஒளிந்திருக்கிறார்கள்..

அவர்களை  நல் வழி நடத்தி...

வெளிக் கொண்டு வாருங்கள்...சில காலத்தில் இந்த நாடு..

மகாத்மாக்கள் மட்டுமே உள்ள நாடாக மாறும்..

பாரதம் போற்றுவோம்..! 
மகாத்மாக்களை உருவாக்குவோம்..!       

ஈழம் என்ன ஈனமா..?.

நண்பா!..

உலகத்தின் பார்வை உன்மீது இருக்கிறது!...
உன் பார்வை மட்டும் ஏன் கண்மூடி இருக்கிறது?..

இதோ... உனது காலடியில்  நம் நாட்டின்
வருங்கால பெருமைகளும்..
வளமான வாழ்வுகளும்..மண்டியிட்டு அமர்ந்துள்ளது..

உன்னுடைய விழிப்புக்காக...
உன்னுடைய  எழுச்சிக்காக..
உன்னுடைய செயலுக்காக...

ஈழம் என்று மலரும்?. என ஏங்கும்..இதயத்திற்கு..
ஈனம் இல்லை எங்கள் இதயம் என்பதை..நிருபி..
உன்னால் மட்டும் தான் முடியும்..!

நம்  நாட்டின் இருள் போக்க...
விழி.!.. எழு.!.. செய்..!..இன்றே..
நீ யோசிக்கின்ற ஒவ்வொரு நொடியும்..
பல உயிர்போகின்றதை நீ அறிவாயா?

நாம் தான் நான்கு திசைகளில் சிதறுண்டு உள்ளோம்...
நம் சந்ததிகளாவது  சந்தோசமாக..
நம் நாட்டில்  வாழட்டும்..இன்றே விழித்தெழு..!

காந்தியின் சிரித்த முகம்


நான் செய்த பொங்கல்..கபடமில்லா உடலெனும் பாத்திரம் கொண்டு..
களங்கமில்லா உள்ளமெனும்..நீரை ஊற்றி
வெள்ளை மனம் கொண்ட அரிசி கொண்டு.
மங்களமாய் முகம் போல பாசிப்பருப்பும்

இனிய பேச்சாய் வெல்லம் சேர்த்தும்..
அன்பாய் ஆசையாய் கிஸ்மிஸ் இணைத்து..
அரவணைப்பாய் முந்திரியும் அதனோடு
நேர்மை எனும் நெய் சேர்த்து..

உண்மை,உழைப்பு எனும் விறகு கொண்டு..
நம்பிக்கை எனும் அடுப்பில் வைத்து..
நட்பெனும் தீ மூட்டி நியாயமாக பேசும்
காற்று ஊதி..நயமாய் சமைத்திடுவோம்..

நான்கு திசையும் அது பொங்குவது போல..நம்
நாளைய திசைகளை நலமாய்ப் செய்திடுவோம்.
அளவுக்கு மீறிய அன்பு கொண்டு.. திகட்டாத தேன்சுவை பொங்கல் செய்வோம்..-அதை திகட்டத்திகட்ட எல்லோர்க்கும் பகிர்ந்தளிப்போம்..ஆசையுண்டு!. பெண்ணே!. ஆசையுண்டு!..
மண்ணுக்குள் செல்லும்
மண்புழுவைப் போல்..-உன்
மனதுக்குள் செல்ல ஆசையுண்டு!..

உன் விழிக்குள் என்னையும்..
என் விழிக்குள் உன்னையும்..
தினந்தோறும் தேட ஆசையுண்டு!..

நிழலுக்காக நீ மரத்தின் கீழே
நின்றபோது மர நிழலின்..
நிஜமாய் மாற ஆசையுண்டு!..
         
அற்புதமாய் நீ வாசிக்கும் ஆனந்த ராகமாய்..
அடிக்கடி நீ திட்டுகின்ற வார்த்தையாய்..-உன் 
ஆசை என்ற எண்ணமாய் மாற ஆசையுண்டு!..
           
அனல் பறக்கும் அறையில் அமரவைத்து..-உனக்கு
அழகாக வியர்க்கின்ற அந்த...
அதிசயத்தை பார்க்க ஆசையுண்டு!..

சாதனைகளும்,சகாப்தங்களும்..
சரித்திரங்களில் பதியும் வேளையில்..
சாலையில் நீ வரும் வழி நோக்கி..காத்திருந்து
சாக தினந்தோறும் ஆசையுண்டு!..வாழ்வியல் கணிதம்..! 
வாழ்வில் அன்பை கூட்டிக்கொள்..!அந்த (+)
கூட்டல்கள் ஈட்டித் தரும்.. உனக்கு சந்தோஷத்தை.

வாழ்வில் நட்பை பெருக்கிக் கொள்..!அந்த (× )
பெருக்கல்கள் உன் வாழ்வு முடிந்த பின்பும்..
வாழும் அவர்கள் நெஞ்சில்..

வாழ்வில் வாழும் முறைகளை (÷ )
வகுத்துக் கொள்..அந்த
வகுத்தல்கள் உன் வாழ்வை வளர்பிறையாக்கும்..

வாழ்வில் சோகத்தை கழித்துக் கொள்..! அந்த (-)
கழித்தல்கள், உன்னை அழித்தல்கள்
இல்லாத ஓவியமாய் காட்டும்.

வாழும் வாழ்வினை சமமாக்கி கொள்..(=)
வேறுபாடு இல்லாத சமூகம் வேரில்
கிளைதளைக்க அது பயன்படும்.

வாழ்வின் ஏற்ற இறக்கங்களை கண்டுகொள்..(< >)
உன்னை வார்த்தெடுத்த தங்கமாய்
மாற்றி அமைக்கும்..
 
வாழ்வின் குறைநிறைகளை கண்டறிந்து கொள்..(+-)
வசந்தமாய்..உன் வாழ்வு மாற அது வகை செய்யும்

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.