இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


கரு மந்திரம்
கருவாய் இருக்கும் கண்மணியே!..நீ -
கருவிலேயே விழித்துக்கொள்ளடி பாப்பா...
உலகத்தின் விதிமுறைகள் உன் காதுக்குள் விழும் முன் உன்னை நீயே உருவாக்கிக்கொள்!..பாப்பா...

மனிதநேயம் மடிந்த மண்ணில் உன்
மழலைக்கால்கள் படும் முன்...
மனங்களின் மணம் பற்றி உன்
மாசற்ற மனதில் விதைத்துக்கொள்!..பாப்பா...

அடிமைத்தனம்,அறியாமை பற்றி.,
ஆறுவயதிற்கு பின் அறியும் முன்...
அன்னையின் ஐந்திரு மாத கருவறையில் கற்று...
அதை அழிக்க தயாராகிக்கொள்..பாப்பா...

மாதர் நம்மை இழிவு செய்யும்
மடமையை கொளுத்துவதோடு தூண்டும்
மனிதர்களையும் கொளுத்துவோம்என்பதை
மனதில் பதித்துக்கொள்...பாப்பா...

பெண் என்பவள் பிறந்துவிட்டால்,
பெருந்துன்பம் படுதல் வேண்டும்என்று
பெரியோர்கள் சொன்னதை...பேதை போல் இனியும்நெஞ்சில்பெறாதே!..பாப்பா.   ..

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.