இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


கைம்பெண்ணின் காதல் க(வி)தை-2


   

     கல்லூரி வரை என் வாழ்வோடு
     கலந்திட்டவனே...என்
     காலம் முழுதும் என்னோடு
     கலந்திட மாட்டாயா..?
     வேலைக்காக வெளிநாடு
சென்றவனே,,! என் மன
வேதனையை அறிந்திடாயோ.? 

    இல்லற வாழ்க்கையிலே..
    என் மன சம்மதமின்றி..
    இனி இது தான் வாழ்வென
    ஏற்றுக் கொண்ட ஒருவரோடு..
    நல்வாழ்க்கை வாழும் முன்..
    நாசமாகி போனதே.!. திடீரென     
    உண்டான இதயத்தின் வலிதனில்
    அவரிதயம் செயலிழந்து போனதே..
    என் வாழ்வும் பொலிவிழந்து போனதே..!

   எல்லாம் முடிந்ததென்று..
   என்னிலை நினைத்து அழுதிடுகையில்
   என்னருகில் வந்து சேர்ந்தாய்..
   என் நிலை கண்டு துவண்டு போனாய்..
   துடிதுடித்துப்போனாய்..அதோடு.

   வடிகின்ற கண்ணீரை துடைத்த உன்
   விரல்கள்..வதங்கிய என் முகத்தை
   தாங்கிய உன் தோள்கள்..
   “உன் வாழ்வு முடியவில்லை..
   என்னோடு தொடரும் இனி.”   
   என்றுரைத்த உன்பேச்சு.    
   எப்போதும் வேண்டுமென
   என் மனம் ஏங்கினாலும்..

   ஊராரின் பேச்சுக்குள்...
   உலகத்தின் பார்வைக்குள்..  
   ஊமையாகிப்போன என் காதலும்
   ஊனமாகிய என் வாழ்வும்..மீண்டும்
   தளிர்த்து விட்டால்..வேசங்கள் பல
   எனக்கிட்டு இட்டு வேசியின் நிலையில்
   நிறுத்திடுவர். யாரோ தவறுதலால்
   ஏற்பட்ட சிதறல்களாய் என் வாழ்வு..!

    
      உன் வாழ்வு நலமாகட்டுமென..
      உன்னை மறுத்து..என் மனதை
      மண்ணில் புதைத்து...மீண்டும் நான்
       மரணித்து வாழ்கிறேன்..உன் நினைவோடு.
       விதவை எனும் பெண்ணின் நிலை..
       என்றுமே..இதுவே என நினைத்து..
       சில நேரம் விக்கித்து அழுகிறேன்.



கைம்பெண்ணின் காதல்..க(வி)தை-1


விபரமறியா பருவத்தில்..
விளைந்திட்ட உறவுக்குள்..
விளையாட்டுத் தனத்தோடு..  
இடையிலே..கைகோர்த்து
கடைவீதியை அளவெடுத்து..
நடந்து செல்கையிலே..நம்மில்
முளைத்திட்ட முத்தங்களை
பிரியமென்று நாம் நினைத்ததுண்டு
                
பள்ளிப்பருவத்திலே..
பருவமெய்திடாத நேரத்திலே
சேர்ந்து படித்திட்ட பள்ளிக்குள்
பகிர்ந்திட்ட நம் கல்விக்குள் கலந்திட்டதை
அன்பென்று நாம் சொன்னதுண்டு.

கல்லூரிப் பருவத்திலே..
காதல்படும் வயதிலே..நல்ல
வாழ்வு வேண்டுமென்று
நல்விடயத்தை நாமும்
நலமாய் படித்திட்டு
நம்மெய் மறந்து.இணைந்து திரிந்ததை
நட்பென்று நாம் சொன்னதுண்டு.


திருமண வயதினிலே...
இருமன இணையும் நேரத்திலே
உன் மனம் வேண்டுமென்று
என் மனது தவிக்கிறதே..
அன்பென்று..பாசமென்று..
நட்பென்று..நினைத்ததன்று..
காதலாய் இன்று மாறியதோ....?

                 ( தொடரும்.. )

நரைத்த காதல்.






உன் காதின் ஓர சில நரைமுடி கூட
என் காதல் ஓரத்தில் பல கவிதை பாடுகிறது.
அங்கொன்றும்இங்கொன்றும் முளைத்திருந்தாலும்
அழகாய் தானடி தெரிகிறாய்...அதுனுள்...நீயும்.
      
இதில் மட்டும் என்ன..விதிவிளக்கு..?
கருப்பென்றால் பிடிக்கின்ற மயிரிலைகள்
வெறுப்பென்று ஆகிவிடுமோ..? இயற்கையாய்..  
வெண்மையாக மாறும்போது..?

இளமைக் காலத்தில் பயிரிட்ட காதல்
முதுமைக் காலத்தில் முழுமையடைந்து   
வெண்மை நிற நாற்றாய் விளைந்து நிற்கிறதோ..?.

மோகக்காதலுள் முளைத்திட்ட அன்பு..
முக்தி நிலையில் பரவசமாய்..வெண்மையாய்.
வெள்ளிக்கம்பியாய்..பரவி தெளிக்கிறதோ..?

காதலாய்..அன்பாய்..கடைந்தெடுத்துகசிந்துருகி..
இன்பமாய்பொங்கிபாசமாய் வெண்ணிற 
கோடுகளாய்.மாறி தெறித்து வெளுத்து நிற்கிறதோ..?

நம் காதலின் உண்மையின் மேன்மையை
வெண்மையாய் உரைத்திடும் அந்த
நரைத்த மயிர்களை கருமையிட்டு
மறைத்திடாதே..! நம் காதலின்
சாட்சியினை வண்ணம் பூசி கரைத்திடாதே..!

நரைத்த மயிரிலைக்குள் தூய்மையாய்..  
செழித்து வளர்ந்த நம் காதலை
மறைத்து விடாதே.! நம் அன்பின் முழுமையை
குறைத்து காட்டிடாதே..!.




சாவில்லா தமிழீழம்

 
புத்தாண்டு பிறக்கட்டும்...
புன்னகைப் பூக்கள் பூக்கட்டும்..
புதுவரவாய் நாம் ஏங்கிய
தமிழீழம் மலரட்டும்..
                   
ரத்தச்சகதி கலந்த மண்ணில்
புத்தமெனும் பூக்கள் பூக்கட்டும்..
மனிதச்சதைகள் தின்ற மண்ணில்
மனிதநேயம் மீண்டும் வளரட்டும்.
                                                   
முடங்கிப்போன எங்கள் இனத்தின்
முதுகெலும்புகள் இனி நிமிரட்டும்..
முகத்திரை அகலட்டும்..எங்கள்
அகத்திரையில் மகிழ்ச்சி பரவட்டும்..
                                     


அமைதிப்போர் நடக்கட்டும்.-நம்
அன்பின் வலிமை வெல்லட்டும்..
அதில்..ஆளுகின்ற கூட்டத்தின்
ஆணிவேர் அழுகட்டும்..அழியட்டும்.
                  
மீண்டும் ஓர் யுத்தம்.கொண்டு
மீதமுள்ள சந்ததியை புதைத்திடாமல்.
புத்த வேதம் கையில் கொண்டு
புது உலகம் படைத்திடுவோம்..

எல்லோர்க்கும் எல்லா ஆண்டும்   
இனியதாக அமையட்டும்..எங்களுக்கு
இந்த வருடம் தமிழீழ சுதந்திரம்.-ஒரு
சாவில்லா சுதந்திரமாய் கிடைக்கட்டும்-

போரில் சாய்ந்து இறந்தவர்க்கு அது
மனச்சாந்தி அமைதியும் தரட்டும்.
தளிர்த்த,.தளிர்க்கும் இளந்தளிர்க்கு
சந்தோச நிகழ்வு இனி உண்டாகட்டும்.









நான்..நீ...(உதடுகள் ஒட்டா கவிதை )



காதல் சகியே..! 
நான் நீயே...!
நீ என் நாளையே..!
நீ என் இதயத்தில் தென்றல்..
நீ என் நிசத்தின்.. நிழல்..
நீ  என்  நேசத்தின் காதல்..
            
நீ கண்கள் கலங்க...கலங்கினேன் நான்.
நீரில்லா கடலில்..கடற்கரை இல்லை
நீயில்லா சரித்திரத்தில்..இனி நானில்லை...
                   
சாலையில் சில நேரங்களில்
என்னை தேடி திரிகிறேன்..கரைகிறேன்...நான்
நீ..கிள்ளிய காதல் குழந்தை நான்.
சிணுங்குகிறேன்.. கட்டிலில் ...
         
இசை சாரல் தெளித்து என்னுள் இறங்கு..என்
இசையாய்... தென்றலாய்..

தூண்டல்கள்




அன்பானவனே.!
            அற்பத்தனமான சின்ன
            விசயங்களை மனதில்
            சில நேரம் நினைக்கையிலே
            அற்புதமான சந்தோசத்தை.
            அள்ளிஅள்ளித் தெளிக்கிறதே...
            
            உன்னுடன் சாலையில்
            நான் இணைந்து நடந்து செல்கையிலே..
            என்னுடலில் எதிர்பாராமல்  
            உன் விரல் உரசி உண்டான
            உணர்வு தூண்டல்கள்..
            
            கடலலையை நான் துரத்தி.. 
            விடலை போல் துள்ளிக்குதித்து,
            தடுமாறி விழும் வேளையிலே..
            என்னிடை தொட்டு இழுத்தபோது
            எனக்குள் ஏற்பட்ட மின்னர்திர்வுகள்..
            
            அருகருகே அமர்ந்து..
            அறிவியல் பாடத்தை..
            ஆராய்ந்த வேளையிலே..
            அங்கும் இங்குமாய்..
            அடிக்கடி புத்தகத்திலே
            அடிதடி நடத்திய நம்
            விரல்களில் உருவான
            மின்னோட்டங்கள்..
           
            பாடத்தின் விளக்கத்தை நாம்
            பகிர்ந்துகொள்ளும் வேளையிலே-உன்
            பார்வை விளக்கால்.. இந்த
            பாவையின் கண்பாவையில்
            ஏற்றிய மின்ஒளிக்கற்றைகள்..

            தவறுகளோடு நான்
            தடுமாறிய வேளையிலே.-
            தவறிலிருந்து என்னை
            தனித்து வைத்து,என்
            தலைநிமிர வைக்க..நீ என்
            தலையில் செல்லமாய் 
            தட்டியதில் உண்டான
            மின்காந்தபுலங்கள்..
                    
            எனக்குள் ஏற்பட்ட தூண்டல்கள்
            உனக்குள் ஏற்படாததால்..நீ..
            மகிழ்வோடு கழுத்தில் மாலையோடு
            மற்ற ஒரு பெண்ணோடு..
            மணாளனாய்..மேடையிலே.

            இன்றும் என்னை நோக்கி நீ சிந்திய
            இன்ப புன்னகை கூடஎன்னுள் தூண்டியது பல
            இன்ப அதிர்வுகளை..அதை.. ரசித்தபடியே..
            கையில் அன்பளிப்போடும்,அட்சதையோடும்
            உன் கல்லூரித்தோழியான...நான்..

ஒப்பிடத்தான் தோன்றுதடி.. (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..)

உன் நெற்றிப் பொட்டில்
சூரியனை எரியவிட்டவன் நானே..

உன் புருவத்தில் கருநிற
வானவில் வரைந்தவன் நானே..

உன் மண் தொடும் கூந்தலில்..
மேகத்தை திணித்து விட்டவன் நானே..

உன் மூக்கின் முக்கில்
நட்சத்திரத்தை ஜொலிக்க வைத்தவன் நானே..

உன் கண்களுக்குள் குளிர்ச்சியாய்..
பனிமலையை கொட்டியவன் நானே.

உன் கன்னக்குழிக்குள்
நீர்ச்சுழல் சுழலவிட்டவன் நானே..

உன் உடலை மேடு பள்ள காடான
பாலைவனமாய் மாற்றிவிட்டவன் நானே..

உன் பாலைவன உடலில் வற்றாத
பாலாறும்,தேனாறும் பாயவிட்டவன் நானே..

உன் மௌனத்தில் மென்மையான
தென்றலை திரியவிட்டவன் நானே..

உன் கோபத்தில் கடுமையான
சூறாவளியை சுழலவிட்டவன் நானே..

உன் சிரிப்பினிடையில் சாரலாய்
மழையை பொழிந்தவன் நானே..

உன் ஒடிகின்ற இடைதன்னில்
கொடிமலரை வளரவிட்டவன் நானே..

உன் பாதத்தின் இதத்தோடு..
தாமரை இதழை இணைத்துவிட்டவன் நானே..

உன் நடையின் அடிச்சுவடை கண்டு நடைபயின்ற
அன்ன பறவையை அழித்தவன் நானே..

உன் முகத்தின் வடிவழகில்
முழுநிலவில் குறைகண்டவன் நானே..


மூன்று முடிவுகளோடு..

முதல் முடிவு

நானே..நானே..என்று இறுமாப்புடன்..
நான் யார்..? கடவுளா..? கவிஞனா..?
காதலனா..?

இரண்டாம் முடிவு.
        
          பெண்ணே..இந்த பிரபஞ்சம்..நீதானே..!
இப்படி உனை புகழ்பவனை.
ஒருமுறை நீ வர்ணித்தது உண்டா..?
உந்தன் பிரபஞ்சம் நான் என்று. 

மூன்றாம் முடிவு.
                      
உன் வாய் வார்த்தையோடு
வாக்கிய இசையையும்..
உன் இதழ்களோடு வழிந்தோடும்
வற்றாத தேன்சுவையும் சேர்த்த என்னை..

உன் இதயத்தோடு மட்டும் சேர்க்க..
உன்னால் முடியாதது..ஏனோ..?


உங்களுக்கு பிடித்தது முடிவு எது..?




ஒப்பிடமட்டேன்..!இனி.





அன்பே..!
                
   உன்னை இனி..

   நிலவோடு ஒப்பிடமட்டேன்..! (சூர்ய) ஒளியை
   உள்வாங்கி ஒளிர்பவள் அல்ல நீ...
                 
   மலரோடு ஒப்பிடமட்டேன்...!ஒருநாளோடு
   உயிர் மடிபவள் அல்ல நீ..
                 
   அஜந்தா ஒவியத்தொடு ஒப்பிடமட்டேன்...!
   அசைவற்று இருப்பவள் அல்ல.நீ..
                  
   தென்றலோடு ஒப்பிடமட்டேன்...!கண்ணுக்கு..
   தெரியாமல் திரிபவள் அல்ல..நீ..

   இசையோடு ஒப்பிடமட்டேன்...!எல்லோர்க்கும்
   இசைவாக இருப்பவள் அல்ல..நீ..

   உலகோடு ஒப்பிடமட்டேன்...!இன்பதுன்பங்கள்..
   உந்தன் உறைவிடம் அல்ல..

   நீ என் உயிர்...
   என் உணர்வானவள்
   என்னுள் இருப்பவள்..
   என்னுள் கரைந்தவள்...
   என்னுள் வாழ்பவள்..
   உனை ரசித்து பார்க்க...
   என்றும் வாழ்வேன்..
   மரணத்தை..துரத்திக்கொண்டே..
                 

சிறு கவிதைகள்-1( காதல் )

       

          
          உண்மைகாதல்

             உள்ளத்திற்குள்  உனக்கு நீயே
          உருவாக்கிக்கொள்வதல்ல...தானாக
          உருவாகி கொள்வது தான் ....
          உண்மையான காதல்...

      அழுக்கு
  

 அன்பே!..
      நீ அதிகமாக உச்சரிக்காத..என் பெயர் கூட
      சில நேரம் அழுக்காய் தெரிகிறது... 
 
      மாக்கோலம்

   அன்பே!..
               நீ  எனை  தொட்டு இடுவதனால்..
              மண்ணில் இடும் மாக்கோலமாக..
              மாறக்கூட தயார் தான்...நான்..

    துன்பம் 
     
     அமுதே!.
       என் மரணத்தில் இல்லா துன்பம்   
       உன் மகிழ்ச்சி இல்லா முகத்தால்        
       உண்டாதானதடி..எனக்கு.

   போதனை மடம் 
           
         அன்பே!..  
       நாம் தினந்தோறும் சந்தித்து பேசும்               பேருந்து நிறுத்தம் கூட  எனக்கு 
       போதனை மடம் தான்..
          
       
           

     

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.