அன்னையே...நீ.. அதிசயங்களின் பாசறை
அன்பின் கருவறை..என் அழகுத் தமிழின் முன்னுரை..
கண்ணுக்கு தெரிகின்ற கடவுள் நீ தானே..! சில நிமிடம் நான்காணாமல் போனாலும் கண்உறக்கம் இழப்பவள் நீ தானே..!
ஐந்திரு மாத கருவறையில் என்னை காத்தவள் நீ தானே..! என் ஐம்புலன் நலமின்றியும் எனை அழகனென்பவள் நீ தானே..!
மழலையாய் செய்த தவறை மகிழ்வோடு ரசித்தவள் நீ தானே..! இன்றுமமதையால் நான் செய்த தவறால் என்னோடு கலங்குபவள் நீ தானே..!
பயணங்கள் தரும் சோகங்களில் நிழலாய் தொடர்பவள் நீ தானே..!
பயன்படாதவன் ஆனாலும் பாசமாய் இருப்பவள் நீ தானே..!
கல்லில் தடுக்கி விழுந்தபோது அந்த கல்லை அடித்தவள் நீ தானே..!
கண்ணீல் தூசு பட்டால் கலங்குபவளும் நீ தானே..!
வேலையின் தாமதத்தில் சில நிமிடம் ஆனாலும்
வீட்டுக் கதவின் நிலையாய் மாறுபவள் நீ தானே..!.
உண்மையன்பு ஊறுகின்ற ஊற்று நீ தானே..!
உனக்கு உதவாதவன் நானாலும் என்
உச்சிமுகர்ந்து மீது முத்தம் தருபவள் நீ தானே..!
தொலை தூர பயணத்திலே என்னோடு
திருநீறாய் வருபவள் நீ தானே..! அந்த திருநீறும்
கண்ணில் பட்டு கலங்கிடுமோ கண்..? என அதை ஊதி கலைத்தவள்.. நீ தானே..!
அன்போடு,தமிழ்ப்பண்போடு,தேசப்பற்றோடு என்
தேகத்தை வளர்த்தவளே..! இது உனக்கான
1 கருத்துரைகள்:
இந்த சூர்யா எனும் புத்தகத்தைப் பிரசவித்துப் பிரசுரித்த அந்தத்தாய்க்கு என் வணக்கங்களும் உரித்தாகட்டும்..
அழகான கவிதைகளின் நாயகன்... காதல்கவிதைகளால் கல்லுக்கும் காதல் ஏற்படுத்தும் மாயவன்.. இந்த சூரியாவின் தளம் செழிக்க வாழ்த்தும்...
- கலை
Post a Comment
உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..