இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்)
உயிரற்ற உரைநடையான என்னை
உன் உண்மையன்பால் வாசித்து.. 
உயிர்கொண்ட கவிதை போல எனை
      உயிர்ப்பெள செய்து விடு.. அதை தினமும் 
      ஒருமுறை நீ என்னை வாசித்து விட்டுப்போ..!அதன் மூலம்
      நான் தினமும் சுவாசித்துக் கொள்கிறேன்..

     நான் படிக்கும் புத்தகத்தில் சில எழுத்தில்..
      உன் பெயரின் எழுத்தை..கண்டறிந்து..
      அதை குண்டு எழுதாக்கி..நான் தினமும்
      இதய அறையில் வாசிக்கின்றேன். வேதமாக
      நீ வாசிக்கின்ற புத்தகத்தில் என் பெயர் வசிக்கின்றதா...? 
        
      முகவரிகள் இல்லாத முகமாய்...மனதை
      மூடி வலி மறைத்து நான் செல்கையில்..உன்
      முகவரியாய் நான் இருப்பதை...உன்
      முக வரி காட்டுகிறதே..! நீ அதை அறிவாயா..?
               
      அங்கிருந்து நான் நகருகையிலே..
      சோகவரியாய்..உன் முகம்..! உன்னருகில் இருக்கையில்
      சுகவரியாய்.. உன் முகம்..! உன்னுள் நான்
      முழுதாய் மூழ்கியுள்ளேனா..?

      அன்று..     
      உன்னை எழுப்பும் அலாரமாய்..
      சில நாட்கள் நான் இருந்தபோது
      இவ்வுலகை எழுப்பும் சூரியனானேன்..என         
      தினம் தினம் கர்வம் கொண்டேன்..
      இன்று..
      உன்னை எழுப்பமுடியா என் விடியலும்
      அஸ்தமனமாகி போனதோ..? அந்த சூரியனும்..
      கடலுக்குள் அமிழ்ந்து கரைந்து போனதோ..?
      உனக்கும் தினமும் விடிகின்றதோ...?
  

கடற்கரையில் நான்.

     

கடற்கரையில் உன்னோடு அமர்ந்து அலைகளின்  அற்புதத்தை   
அயராது பேசிய நாட்களும்... 

கடற்கரையின் மணல் அள்ளி
மணிக்கணக்காய் எண்ணிக்கொண்டே பேசாமல் அமர்ந்த நாட்களும்...
  
மணல் வாரி இறைத்து விளையாடும்
மழலையாய் மாற  மாட்டோமோ?..என்று 
மயங்கிய  நாட்களும்...
           
சிறுவன் எறிந்த ஈரமணல்
உன் மூக்கின் மேல் விழுந்ததை பார்த்து
நான் சிரிக்க..நீ சிணுங்கிய நாட்களும்...

கரையோடு கடல் பேசும்  காதலை ..
கண்ணியமைக்காமல்...கண்ட நாட்களும்...
மறக்கமுடியவில்லை என்னால்..

கரையை நோக்கி வரும் அலை போல..
மனதுக்குள் மீண்டும் மீண்டும் நியாபகங்கள்..


இன்று..
நாம்  காதலித்த அதே கடற்கரையில்...
நான்..மட்டும்..தனிமையாக..

உன்னை செதுக்கு..!

                                   


உன்னை செதுக்கு..!
உன்னை செதுக்கு..!
உண்மையின் உளிகொண்டு..
உன்னை செதுக்கு..!
                             
அன்பு மனம் சிதைந்திடாமல்
அழகாய் செதுக்கு..!உன்
ஆறறிவும் ஆக்கம் கொள்ளட்டும்..
அன்பால் செதுக்கு..!
                
பாச குணம் குலைந்திடாமல்
பண்பாய் செதுக்கு..!உன்
நேச குணம் குறைந்திடாமல்.
நேர்மையால் செதுக்கு..!
            
தாழ்ப்புணர்ச்சி தழைக்கவிடாமல்.
கிளையில் செதுக்கு..!
ஜாதி,மதவேறுபாடு வளர்ந்திடாமல்.
வேரோடு அதை செதுக்கு..!
                
அரக்க எண்ணம் எழுச்சிகொள்ளாமல்
அடியோடு செதுக்கு..!
இரக்க குணம் தழைத்தோங்க
இடறுகளை செதுக்கு..!
                
இவற்றை செதுக்குவது எளிதானால்...
பின்..உன்னால் முடியும் 
நீரை செதுக்க..
நெருப்பை செதுக்க...
காற்றை செதுக்க.. 
கடலை செதுக்க..
வானை செதுக்க...இந்த..
வையகத்தை செதுக்க..புதிரா..? புனிதமா..? அந்தரங்கம்..!


         உள்ளத்திற்குள் ஒளித்து வைக்கும்
       உண்மைகள் உரக்கசொல்லாமல்
       ஊமையாய் மாறி உறவாடாமல்..
       உறங்குகின்றன..அந்தரங்கமாய்.

       வெளிஉலகம் நம்மை
       வேடிக்கை பார்த்திடும் என
       வெளிவராத உண்மைகள்..
       உள்ளுக்குள்.. அந்தரங்கமாய்.
                         
       அந்தரங்க உண்மைகள்
       அவிழ்க்கப்படும் போது தானும்
       அந்தரங்கத்தில்..என்பதால்...என்னவோ..
       அவிழ்க்கப்படமுடியா முடிச்சாய்...
       அவரவர் ஆழ்மனதில்..அது.
           
       அந்தரங்கம் அழகானது...அந்த
       அரங்கமெங்கும் அன்பாய் நிறைந்த போதும்.
       அன்பானவரிடம் அது மதிக்கப்படும் போதும்
  
       அந்தரங்கம் அழகானது...
       புரியாதபோது புனிதமாக தெரிவதும்
       புரிந்தபின் அவர்களை புதிராக நினைப்பதும்.
             
       அந்தரங்கம் அழகானது...
       உள்ளன்பில் அது உறங்கும் போதும்
       அற்புதங்கள் அதில் இருக்கும் போதும்

       ஆசைகளை ஒழித்து..அன்பை நிறைத்து..
       ஈனச்செயல் அழித்து..ஈகைச்செயலை சேர்த்து..
       பண்பாடற்றதை ஒதுக்கி..பாசங்கள் புகுத்தி..

       அந்தரங்களை அன்பாய்..மாற்றிவிடு..
       அற்புதங்கள் அதனோடு கலந்துவிடு.
       அந்தரங்களை அழகாய் மாற்றிவிடு..அதை
       அரங்கத்தில் சேர்த்து புனிதமாக்கி விடு.

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.