இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


புரட்சியின் புதிய புலம்பல்.


  

மனிதா...! 
உள்ளங்களின் உரசல் இல்லாமல் பல 
உடல்களின் உரசல் மட்டுமே..
உலகம் என்று நீ உலவியதுமில்லாமல்!..

விலைவைத்து பேசும் விலைமாதுவின்..
சதைகொண்ட உடல்கள் மீது..
போதை கொண்டு நீ ஊர்ந்ததுமில்லாமல்!..

“”கட்டுப்பாடு என்ற சிறைக்குள் அந்த
கட்டுப்பாட்டை தினம் சிறைவைத்து..-பலருடன்
கட்டுண்டு நீ கிடந்ததுமில்லாமல்!..

 மனிதனாய் பிறப்பதே...மகத்தான பிறப்பு-நீ
   மனித நாய் போல் வெறிகொண்டு..
   மங்கையருடன் மயங்கி சரிந்ததுமில்லாமல்!..

 “ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டை
   உள்ளத்திற்குள் தினம் நிறுத்தி...
   உன்னையே உலகாய் உயிராய்..நினைக்கும்...
   உன்னவளிடமும் நீ சேர்ந்திருந்ததால்..

    பாரதி நினைத்த புதுமைபெண்ணாய்..
    அடிமைத்தனத்தை அடிமையாக்க இந்த
    அகிலத்தில் உன்னவளால் பிறக்கும் எனக்கு!..
    அவளின் கருவறையிலேயே     
    “எச்.ஐ.வி.வைரஸ்

ஆசை தான்..எனக்கு.
கடற்கரையில் நீ செல்லும் போது -உன்
கால்பாதத்தை தடவிச்செல்லும் ..
கடலைலையாய் மாற ஆசை தான் எனக்கு..!


தோட்டத்திற்குள் நீ செல்லும்...போது
பட்டுபூச்சியாய் ,உனது மேனியில்
தொட்டுவிட்டு செல்ல ஆசை தான் எனக்கு..!

தென்னந்தோப்பிற்குள் நீ செல்லும்...போது
தென்னங்கீற்றாய் மாறி,உன்

தேகத்தை தீண்டிச்செல்ல ஆசை தான் எனக்கு..!


ரோஜா தோட்டத்த்திற்குள் நீ செல்லும்...போது
உனது சேலையை பிடித்திழுக்கும்
முள்ளாய் மாற..ஆசை தான் எனக்கு..!

வழி தெரியாத பாதையில் நீ செல்லும் போது
பாதையாக மாறி உந்தன் வலி தீர்க்க...ஆசை தான் எனக்கு..!


கடற்கரைமணலில் நீ செல்லும் போது உன்
பாதத்திற்கும் ,மண்ணிற்கும் இடையில் சிக்கி
மடிந்து சாக... ஆசை தான் எனக்கு..!


தினந்தோறும் நீ வைக்கும் பூவாக மாறி..
தினமும் வாடி வதங்க ... ஆசை தான் எனக்கு..!


ஒப்பிடத்தான் தோன்றுதடி. (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..)


உன் நெற்றிப் பொட்டில்
சூரியனை எரியவிட்டவன் நானே..!

உன் புருவத்தில் கருநிற
வானவில் வரைந்தவன் நானே..!

உன் மண் தொடும் கூந்தலில்..
மேகத்தை திணித்து விட்டவன் நானே..!

உன் மூக்கின் முக்கில்
நட்சத்திரத்தை ஜொலிக்க வைத்தவன் நானே..!

உன் கண்களுக்குள் குளிர்ச்சியாய்..
பனிமலையை கொட்டியவன் நானே..!

உன் கன்னக்குழிக்குள்
நீர்ச்சுழல் சுழலவிட்டவன் நானே..!

உன் உடலை மேடு பள்ள காடான
பாலைவனமாய் மாற்றிவிட்டவன் நானே..

உன் பாலைவன உடலில் வற்றாத
பாலாறும்,தேனாறும் பாயவிட்டவன் நானே..!

உன் மௌனத்தில் மென்மையான
தென்றலை திரியவிட்டவன் நானே..!

உன் கோபத்தில் கடுமையான
சூறாவளியை சுழலவிட்டவன் நானே..!

உன் சிரிப்பினிடையில் சாரலாய்
மழையை பொழிந்தவன் நானே..!

உன் ஒடிகின்ற இடைதன்னில்
கொடிமலரை வளரவிட்டவன் நானே..!

உன் பாதத்தின் இதத்தோடு..
தாமரை இதழை இணைத்துவிட்டவன் நானே..!

உன் நடையின் அடிச்சுவடை கண்டு நடைபயின்ற
அன்ன பறவையை அழித்தவன் நானே..!

உன் முகத்தின் வடிவழகில்
முழுநிலவில் குறைகண்டவன் நானே..!


மூன்று முடிவுகளோடு..

முதல் முடிவு

நானே..நானே..என்று இறுமாப்புடன்..
நான் யார்..? கடவுளா..? கவிஞனா..?
காதலனா..?

இரண்டாம் முடிவு.

              பெண்ணே..இந்த பிரபஞ்சம்..நீதானே..!
இப்படி உனை புகழ்பவனை.
ஒருமுறை நீ வர்ணித்தது உண்டா..?
உந்தன் பிரபஞ்சம் நான் என்று. 

மூன்றாம் முடிவு.
                      
உன் வாய் வார்த்தையோடு
வாக்கிய இசையையும்..
உன் இதழ்களோடு வழிந்தோடும்
வற்றாத தேன்சுவையும் சேர்த்த என்னை..

உன் இதயத்தோடு மட்டும் சேர்க்க..
உன்னால் முடியாதது..ஏனோ..?


உங்களுக்கு பிடித்தது முடிவு எது..?

திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்)அன்பே..!    
தினம் உன் பேச்சு கேட்காத இதயம் படபடப்பில்...
சில நேரம் என் மனமும மரணத்தில்..
காத்திருந்து காலம் போனது..உன் மனம் மட்டும்
எந்தன் நினைவு கொள்ளாது...ஏன்.?


நீ பேசாத நேரங்களில்..என் புன்னகைப்பூக்களும்..
பொழிவின்றி மலராமல்..அனலின் வதைப்பில்..
ஏக்க தருணங்களில்..நான்..வலியுடன்..
உனக்குள் அந்த வலி உண்டானதா..?


 உன்னிதழ் பேச்சு கேட்காமல்..உலகம் இருண்டது எனக்கு...
 உன் மூச்சின் சப்தம் கேட்டு முழித்து கொண்டது...என்..கிழக்கு
 கேட்காமல் போய்விடுவேனோ என உன் பேச்சை இசையாய்
 அலைபேசியில். அடைத்தேன்..நானும் அதில்
 அடைக்கப்பட்டேன்.என் மூச்சின் சப்தம் உனக்கு கேட்டதா..?


 முடிவுரை போல் நம் இதயம் இணையாது என்று நீ
 முன்பே சொல்லிவிட்டபோதிலும் அதையே நினைத்து
 முன்னுரை மட்டுமே எழுதுகின்றேன்..என் இதயத்தில்...
 முடிவுரையை நீ மாற்றுவாய் என்று.
 முடிவுரையை மாற்றும் மாற்றம் வந்ததா.. உனக்குள்..? 

 என் இனியவளே..! என் இனிய வலியே..!
 ஒருமுறை மட்டும் அந்த உண்மை சொல்லி விடு..!
 பலமுறை நான் வாழ ஒரு உலகம் கிடைக்கட்டும்.
 உன் மனம் எனை ஒரு நொடியாவது நினைக்கட்டும்


 (தொடரும்..)

கரை சேரா ஓடங்கள்கூவத்து பக்கத்திலே..நம்ம குடிச இருந்தாலும்..
உசந்த இடத்தில..உன்னத்தான் தங்க வச்சு படிக்கத்தான்
உன்ன வைக்க தினம் கால் வயிறு கஞ்சி குடுச்சேன்..
                 
குடிகார உங்கப்பன் கூத்தியளோட சேர்ந்திருக்கான்..
குடிக்க தினமும் காசு நான் தந்தா..
குடித்தனம்..எங்கக்கூடயாம்..
குடிக்க காசு தந்துட்டா..உன்ன படிக்க யார் வைப்பா..?
                
அரசாங்க வேல..கிடைக்காம போயடுமெனு
பள்ளிக்கூட படிப்ப பாதியில நிறுத்திப்புட்டு
சாக்கடைய அள்ள வச்சான்...சண்டாளன்..எங்கப்பன்..
சாகுற வர எம்பொலப்பு சாக்கடைன்னு ஆனாலும்..
                
ஊருக்குள்ள உள்ள அழுக்க கழுவ
கொஞ்சம் என்னால முடிஞ்சது..மனுச
உடம்புக்குள்ள உள்ள அழுக்க கழுவ
யார் இருக்கா..ஊருக்குள்ள..?

கூவத்தில பிறந்த மக..கோட்டையில கொடி ஏத்துவா...
நம்ம குறையெல்லாம் தீர்ப்பான்னு..மனக்கோட்டை கட்டி
வச்சிருந்தேன்..பாவி மக சிறுக்கி...! நீ படிப்பை பாதியில
நிறுத்திப்புட்டு காதல்ல சிக்கி ஓடிப் போனாயே..!
என்னயும்..தல முழுகி தனியாளா ஆக்கினாயே..!


தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.