கணிணி(கன்னி)தேவதையே..!
கணிணியின் கற்பிற்கு களங்கம் வைரஸ்..!- நம்
காதலின் கற்பிற்கு
களங்கம் உன் சைலன்ஸ்..!
சைலன்சை நிறுத்தி
என்னை டவுன்லோடு செய்து
உனக்குள் இன்ஸ்டால் செய்துக்கொள்ளடி..!
ஆயிரம் வைரஸ் இங்கிருந்தாலும் உன்னை
அழியாமல் காப்பேன் ஆறுதலாய் உடனிருந்தே..!
உனக்குள் நான் இருக்கின்ற வரைதனில்.-ஒரு
தீங்கும் சேராமல் உன்னைக்காப்பேனடி...
ஒருமுறை எனை உனக்குள் புதைத்துக்
கொள்ளடி..!
மறுகணமே உனக்கு நானும் அடிமை தானடி..
உன்னை காக்கும் பொறுப்பு கொண்டு
தினமும் தூங்காமல் இருப்பேனடி..!
வாழ்வில் ஒருமுறை ஏற்றுக்கொள்ளடி..- உனை
வாழ்வின் இறுதிவரை நலம் பெற செய்வேனடி..!
வாழ்வில் நல்லன,கெட்டன எவையென்று அறிந்து
நல்வழி காட்டி அழைத்துச்செல்வேனடி..!
1 கருத்துரைகள்:
காதல் வைரஸ்
ம்ம்ம் அருமை அருமை தோழரே
Post a Comment
உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..