நீ சோகமா..?
மனதின் ஆழத்தில்
சோகம் இருந்தால் கவிதை வருமாம்..! –
என் மனதின் ஆழத்தில்
நீயுள்ளாய்..!
கவிதை அருவியாய் வருகிறது..நீ
சோகமா..?
செல்லரிப்பு
செத்தபின்பு
செல்லரித்து போகின்ற உடல் இது..
உன்“இல்லை”சொல்லால்
செல்லரிக்க வைத்து
விட்டாயே..? என்
உயிர் நீ இருக்கும்
போதே...!
கலங்கிய மேகமாய்...
கரையோடு அலைபேசும்
பேசும்
காதல் கலங்கியதில்லை– என்
கண்களோடு நீ பேசும்
மௌனம் மட்டும்..-
கலங்கிய மேகமாய்
ஆக்கியதடி..! என் கண்களை..
வானம் பார்த்த பூமி
வானம் பார்த்த
பூமியாய் நான் உள்ளேன்...நல்ல
வார்த்தையை நீ
மட்டும் உதிர்த்து விட்டால்..
பனி விழுந்த
புல்வெளியை போல் என் நெஞ்சம்
பளபளக்கும்...!
பலூன்
முள்பட்டால்
உடைந்துவிடும் பலூன் போல -உந்தன்
சொல்பட்டதால்
உடைந்ததடி..- என் மனது...
0 கருத்துரைகள்:
Post a Comment
உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..