இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


உணர்வுகளா..?! உணர்ச்சிகளா..?!
தேகத்தைத் தின்று
தேனமிர்தம் திகட்ட குடித்து
தீச்சுவர் உடலில் தகிக்கும்
தீச்சுவாலையை சுவைத்துத்
தீய்ந்துபோய் இறந்துபோக
சாபம் ஓன்று கேட்பேன் உன்னிடம்..அந்த
சாபமாய் உன்னையே கேட்பேன்..!உன்னிடம்.

தழுவலின் தேடலில்
தவழுகின்ற இன்பங்கள்..
அறிந்திடாத விடயங்கயறிய
அரிய சொர்கத்தின்
அற்புத கதவினை திறந்திட
அந்தரங்க சாவி கேட்பேன்..!உன்னிடம்.
                               
வேர்நீராய் உன்னுள் நுழைந்து
விளைநிலமாய் உனை மாற்றி
வெகுண்டலச்செய்திடும்   
கிளர்ச்சி நரம்பினை
பிடித்தெழுத்து முறுக்கிட
அனுமதி கேட்பேன்..!உன்னிடம்.

இதயத்தின் சாயலின்
இதழ்களில் தேனை சுவைத்து
இவ்வுலகின் இனிமைதனை
சுரக்கும் அற்புத ஊற்று.அதை
ஒரு துளியும் சிந்தாமல் குடித்திட
உன் இதழ்கிண்ணம் கேட்பேன்..!உன்னிடம்.
             
இன்பத்தின் வழி தனை
இருவரும் கண்டு கொண்டு..-பின்
இருவரும் தொலைந்து போவோம்.
இயற்கையின் ஈர்ப்பில் பிணைந்து
இணைந்து கொள்வோம்..

இன்பலோகம் எதுவென்று அறிந்து
இன்பத்தின் சூட்சமத்தில் சிக்கித்திணறி..
இன்பமாய் இறந்து போவோம்..

0 கருத்துரைகள்:

Post a Comment

உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.