மண்ணுக்குள் செல்லும்
மண்புழுவைப்
போல்..-உன்
மனதுக்குள்
செல்ல ஆசையுண்டு!..
உன் விழிக்குள் என்னையும்..
என் விழிக்குள் உன்னையும்..
தினந்தோறும் தேட ஆசையுண்டு!..
நிழலுக்காக
நீ மரத்தின் கீழே
நின்றபோது – மர
நிழலின்..
நிஜமாய் மாற ஆசையுண்டு!..
அற்புதமாய் நீ வாசிக்கும் ஆனந்த
ராகமாய்..
அடிக்கடி நீ திட்டுகின்ற
வார்த்தையாய்..-உன்
‘ஆசை’ என்ற எண்ணமாய் மாற ஆசையுண்டு!..
அனல் பறக்கும் அறையில் அமரவைத்து..-உனக்கு
அழகாக வியர்க்கின்ற அந்த...
அதிசயத்தை பார்க்க ஆசையுண்டு!..
சாதனைகளும்,சகாப்தங்களும்..
சரித்திரங்களில் பதியும்
வேளையில்..
சாலையில் நீ வரும் வழி நோக்கி..காத்திருந்து
சாக தினந்தோறும் ஆசையுண்டு!..
2 கருத்துரைகள்:
i like your poem
thanks for your comments..
Post a Comment
உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..