இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


நான் செய்த பொங்கல்..கபடமில்லா உடலெனும் பாத்திரம் கொண்டு..
களங்கமில்லா உள்ளமெனும்..நீரை ஊற்றி
வெள்ளை மனம் கொண்ட அரிசி கொண்டு.
மங்களமாய் முகம் போல பாசிப்பருப்பும்

இனிய பேச்சாய் வெல்லம் சேர்த்தும்..
அன்பாய் ஆசையாய் கிஸ்மிஸ் இணைத்து..
அரவணைப்பாய் முந்திரியும் அதனோடு
நேர்மை எனும் நெய் சேர்த்து..

உண்மை,உழைப்பு எனும் விறகு கொண்டு..
நம்பிக்கை எனும் அடுப்பில் வைத்து..
நட்பெனும் தீ மூட்டி நியாயமாக பேசும்
காற்று ஊதி..நயமாய் சமைத்திடுவோம்..

நான்கு திசையும் அது பொங்குவது போல..நம்
நாளைய திசைகளை நலமாய்ப் செய்திடுவோம்.
அளவுக்கு மீறிய அன்பு கொண்டு.. திகட்டாத தேன்சுவை பொங்கல் செய்வோம்..-அதை திகட்டத்திகட்ட எல்லோர்க்கும் பகிர்ந்தளிப்போம்..0 கருத்துரைகள்:

Post a Comment

உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.