கருவறையில் நான் செய்த..வன்முறையை -என்
கருத்தம்மாவின் பொற்காலம் என அவள் சொன்னதுண்டு.
தவழும் மழலையாய் நான் தாவி ஏறிய நெஞ்சை தடவி தந்தையும் அதை பொற்காலம் என சொன்னதுண்டு.
அப்படியே நானும் இருந்திருக்கலாமோ.!?
ஆற்றுப்படுகையிலே ஊற்றுத் தோண்டி களித்ததும்
கிணற்றுக்கரையிலே தோழியோடு ஆடி குளித்ததும்
நெஞ்சை விட்டு நீங்கிடுமோ...?
பருவமெய்திய வயதில்..எந்தன்..
பெண்மையோடு புதிதாய் நாணமும்...ஒட்டிக்கொள்ள
பெரியவள் ஆணேனோ..? என்று என்னை எண்ணி
பிரமித்த தருணங்கள் விலகிடுமோ..?
மனம் புரியா பருவத்தில் துளிர்ந்த ஈர்ப்பு காதலும்-அது
மடத்தனமென உரைத்த குடும்ப பாசமும்...மறக்க முடியுமோ..?
இளவயதில் அன்பை எனக்குள் கொட்டிவனோடு திருமணமும்.
இரு உயிர்க்குள் ஒரு உயிர்ப்பூ பூத்திட்ட நேரமும்..
இதயத்தை விட்டு... என்றும் இடம் பெயர்ந்திடுமோ..?
தடி ஊன்றி நடக்கின்ற இந்த தள்ளாத வயதிலே..என் மேல்
தாளாத..தணியாத அன்பு முத்தம் பொழிபவனே..!என்னவனே..!
மீண்டும் கிடைத்திடுமோ..? இன்னொரு மானிடவாழ்வு..?
மாண்டு மீண்டுப் பிறந்திடுவேனோ...? இந்த
உலகிலே..!
1 கருத்துரைகள்:
உணர்வு மிக்க கவிதை கவிஞரே
Post a Comment
உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..