இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


அயல்தேச அனுபவம்..வறுமையை தோண்டி..அடியோடு
புதைத்திட வேண்டி..வளமையை..
வாழ்வில்..இணைத்திட வேண்டி..  
               
கரைகளை தாண்டி..வாழ்வில்
கரையேற வேண்டி..
கடல் கடந்து வந்தோம்..!
கனவோடு வந்தோம்..!  

ஒட்டிக்க்கிடந்த பாசத்தை.
வெட்டிக்கொண்டு வந்தோம்..
கட்டு கட்டாய் பணம் கிடைக்கும்
என மதியிழந்து பிரிந்தோம்..!
  
இயந்திரத்தின் இதயமாகி
இரவும் பகலும் உழைத்தோம்..
இலட்சியத்தை அடைய தினம்
செத்து செத்து பிழைத்தோம்..!
  
பணமொன்றை கண்டோம்.அதை
தின்று பிணமாகிப்போனோம்..
மனமொன்றை புரியாமல்
ஈனமாகி வாழ்ந்தோம்..!

கைநிறைய பணமிருந்தும்
மனம் வறுமையோடு கிடந்தோம்...!
பந்தங்களும் பாசங்களும்
தொலைக்க கிடைத்த பணம்.
நம் கையில் என அறிந்து
வெட்கித் தலைகுனிந்து
கூனிக்குறுகி நின்றோம்..!
 

2 கருத்துரைகள்:

செய்தாலி said...

எம்மைப் போன்றவர்களின்
அகக் குமறல்களை வரிகளில்
அசாதாரணமாய் தீட்டி விட்டீர்கள் கவிஞரே

கவிதந்த கவிஞருக்கு வாழ்த்துக்கள்
இவ்வரிகளில் வாழும் எம்மைப் போன்றவர்களுக்கு
என் அனுதாபங்கள் (எனக்கும் சேர்த்து )

தேனி"சூர்யா"பாஸ்கரன். said...

இது நம் போன்றவர்களின் குமுறல்கள் நண்பரே..எனக்கும் சேர்த்து அனுதாபம் கொள்ளுங்கள்..

Post a Comment

உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.