மனமில்லா
மனிதா.!
மனம் கொள்ளும் காதல்
பற்றி
அறிவாயோ..நீ..!..
அச்சடிக்கப்பட்ட
காகிதத்திற்காக
ஆசைகளை சுமந்து வரும்
அரும்புகளை கிள்ளி
விடாதே!..
மதம் எனும் மதம்
பிடித்த நீ
மனம் கொண்ட காதலை..
மண்ணோடு மாய்த்து
விடாதே!..
ஜாதி என்ற சாக்கடையில்
புரளுவதை நிறுத்தி
விட்டு
காதலுக்கு ஜோதி
ஏற்று!..
அந்த ஜோதி எண்ணையிட்டு
எரியும் விளக்காக
இருக்கக்கூடாது!..
உனை உள்ளம் உள்ள
மனிதனாக...
உலகிற்கு காட்டும்
உன்னதமான..
உயர்ந்த ஜோதியாக இருக்கட்டும்..!
0 கருத்துரைகள்:
Post a Comment
உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..