இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


தலைப்பில்லா கவிதை
    காதலியே..!
    நீ எனக்காக பிறந்த கிளி..
    நான் உனக்காக வாழும் புலி..
    காதல் அம்பை எய்தது உனது விழி.
    நான் தப்பிக்க இனி இல்லை வழி.

    உனது அழகிய பாதங்களுக்கு இணை பீலி.
    நீயே.. எனது காதலி.
    எல்லோருக்கும் வாழ தேவை..வளி.
    நான் வாழ தேவை..உனது சிரிப்பொலி..

உன் மனதில் ஏன் இன்னும் கிலி..?
என் இதயகோட்டையில் இடம் காலி.
    அவ்விடத்தில் நீ ஏற்று..காதல் ஒளி.
உனைபார்த்த நாள் முதல் ஆகிவிட்டேன்..
    கவிஞர் வாலி.

    நான் சொல்வது இல்லை போலி.
    பெண்ணே..இன்னுமா..மன உறக்கம்..? விழி..
என் இதயத்தை திருடி வாங்கு..பழிக்குப் பழி.
நாள் பார்த்து கட்டுவேன்..உனக்கு தாலி.

    அதை பார்த்து மேகம் விடும் ஆனந்த நீர்த்த்துளி.
    பிறகு நாம் செல்லும் அறை..பள்ளி.
    நீயே எனக்கு என்றும் வேலி..
    நான் தேடிச் செல்லேன் வேறு ஒரு தோழி.

    இனி ஊரார் நம்மை பார்த்து பேசமுடியாது..கேலி.
    நாம் வாழ்க்கை இனி ஜாலி..ஜாலி..

0 கருத்துரைகள்:

Post a Comment

உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.