இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு ( காதல் )ஜன்னலின் கவிதை..

 நீ வலம் வரும் தெருவில் உள்ள -என்
 வீட்டு தெருவோர ஜன்னலும்
 உன்னால் தினந்தோறும் கவிதைகள் பாடுதடி..!
 என்னுடைய புலம்பல்கள் தாங்காமல்..

போதைப்பூக்கள்

 நீ செல்கின்ற பாதையில் தினம்
 கோடிப் கவிதைப்பூக்கள் பூக்கின்றது...!
 நீ சொல்கின்ற வார்த்தையில் தினம்
 கோடிப் போதைப்பூக்கள் பூக்கின்றது..! என் மனதில்.
              

         அக்னியின் உற்சவம்

 அக்னியின் உற்சவ நாட்களில் ..உன்
 அழகுப் பாதங்கள் ஒரு அடி எடுத்து வைத்தாலும்..
 அல்லல் படுகிறது...!என் மனம்.    

                        மழைச்சாரல்

 உன் நினைவுகள்...மழையில் பிரியும் சாரல் போல.
 என்னுள் சுகமாய்...குளிராய்...மென்மையாய்..     
 என்றும் மழைக்காலம் தான்..எனக்குள்ளே...
                       
                       மவுனம்

 நீ பேசாமல் பேசும் பேச்சு கூட பலநேரம்
 போதையை உண்டாக்குகிறது..எனக்குள்...
 நீ தான் உலகின் போதையுள்ள பேதையோ..?

2 கருத்துரைகள்:

செய்தாலி said...

வரிகளை வாசிக்கையில்
எனக்கும் கொஞ்சம் ஏறுகிறது
காதல் போதை

அருமை பாராட்டுக்கள் கவிஞரே

தேனி"சூர்யா"பாஸ்கரன். said...

நன்றிகள்..நண்பரே..உங்களின் அன்பு பாராட்டுக்கு..

Post a Comment

உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.