இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


இங்கு மட்டும் தான்..




இங்கு மட்டும் தான்..
மீன்கள் தூண்டில் போட..
மீனவர்கள் மாட்டிக் கொள்கின்றனர்.

                          
இங்கு மட்டும் தான்..

மான்கள் வேட்டையாட..
புலிகள் இரையாக்கப்படுகின்றன.


இங்கு மட்டும் தான்..
மலர்கள் விழுந்து..
முட்கள் காயமாகின்றன.


இங்கு மட்டும் தான்..

ஆறுகள் கலக்கப்பட்டு..

கடல்களும் நன்னீராக்கபடுகின்றன.

                       

இங்கு மட்டும் தான்..
அன்பு எனும் ஆயுதம்கொண்டு..
இதயங்கள் இடம் பெயர்க்க படுகின்றன.
                    


எங்கு..????..........................  
.............................................
...............................காதலில்.

4 கருத்துரைகள்:

செய்தாலி said...

கவிஞரே அருமை அருமை கவிதை சூபர் பாராட்டுக்கள்
நான் இடும் கருத்துரைகள் உங்கள் தளத்தில் காணப்ப்டுவதிலையே ஏன்


settings -comments

Show word verification for comments?
No

இதில் நோவை க்ளிக் செய்யுங்கள் அப்போதுதான் நிறைய நண்பர்களின் கருத்துரைகள் உங்களுக்கு கிடைக்கும்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

காதல்... காதல்.. கதல்....

வேரையும் விண்நோக்கி வளர செய்யும்...
பாலையையும் சோலையாக மாற்றம் செய்யும்...

உலகத்தை நம்மிடமிருந்து பிரிக்கவும் செய்யும்...
உயிரையும் உடலைவிட்டு பிரிக்கவும் செய்யும்...

அருமையான வரிகள் நண்பா...

தேனி"சூர்யா"பாஸ்கரன். said...

வேலை பளுவினால் சில நாட்களாக வரமுடியவில்லை..உங்களின் வாழ்த்தும்.உதவியும் யனை மெய்சிலிர்க்க வைக்கிறது..நண்பர்களே.. செய்தலி நீங்கள் சொன்னது போலவே செய்கிறேன்..மிக்க நன்றி..

கலைவேந்தன் said...

காதலில் மட்டுமே தன்னை இழந்தும் தன்னவரைக் காக்க முன்வரும் தியாகம் உண்டு..

அருமையான கவிதைக்கு அதிபனே .. இளவலே... நீ வாழி..!

- கலை

Post a Comment

உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.