இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


எனது முத்தான மூன்று முடிச்சு ..(கலை அண்ணாவின் அன்பு வேண்டுகோள்கிணங்க.)







பிடித்த உறவுகள்


1.பெற்றோர்.
2. மனைவியும், மகனும்.
3. நண்பர்கள்.


பிடித்த உணர்வுகள்.                


1.அன்பு பொங்கி அழுகின்ற உணர்வு.  
2.பிடித்த இசையில்   கரையும் உணர்வு.
3.கவிதையில் நுழைந்து திரியும் உணர்வு.


பிடிக்காத உணர்வுகள்.            

1.எப்போதும் அமைதியாக இருக்கும் உணர்வு.
2.மனது சொல்வதை உடல் செய்யாத உணர்வு.
 3.எதிர்காலத்தை பற்றி எப்போதும் நினைக்கும் 
 உணர்வு.


முணுமுணுக்கும் பாடல்கள் 

1.புது வெள்ளை மழை.(ரோஜா )
2.அனல்மேலே பனித்துளி(வாரணம் ஆயிரம் )
3.பூக்கள் பூக்கும் தருணம்.(மதராச பட்டிணம்)
 (இனிய மெல்லிசை காதல் பாடல்கள் 
 அனைத்தும்)


பிடித்த திரைப்படங்கள்


1.குருதிப்புனல்
2.காதலுக்கு மரியாதை..
3.வாரணம் ஆயிரம்.


அன்புத் தேவைகள்


1.அன்பானவர்களிடமிருந்து அன்பு மட்டுமே.
2.என் அன்பின் ஆழம் 
 தெரியவர்களிடமிருந்தும்.அன்பு மட்டுமே.
3.என்றும் அவர்களின் உறவும்..உன்னதமான 
 அன்பும்.


வலிமையை அழிப்பவை


1.காதல்..
2.தூக்கம். 
3.துக்கம்.


குட்டித் தத்துவம்


1.உனக்கென வாழ்வதை உன்   
 உள்ளத்திலிருந்து  எடுத்து விடு.
2.அன்பே மதம்...நட்பே வேதம்...
3.எச்சங்களின் இன்பமே உலகாகும்..
 இவ்வுலகில் மாறாத நியதி இதுவாகும்.


பயமுறுத்தும் பயங்கள்


1.தனிமையான வாழ்க்கை.
2.நட்போடிருந்து புறம் பேசுவது.
3.நம்பிக்கை துரோகம்


அடைய விரும்பும் நிலையான விருப்பங்கள்

1.தனி மனிதனாய் பிறந்தேன்.நல்ல மகனாய் 
 நல்ல தந்தையாய் இறக்கவேண்டும்.
2.ஒருமுறையேனும் எனது வரிகள் 
 திரைப்படத்தில் அரங்கேற வேண்டும்.
3.மகிழ்ச்சியான நிலையிலேயே என் மரணம் 
 வேண்டும்.


கற்க விரும்புவது


1.தமிழ்மொழி தவிர மற்றமொழிகளும் கற்க 
 வேண்டும்.
 2.மனிதர்களின் மனம் பற்றி கற்க வேண்டும். 
3.கணிணி துறையில் வடிவமைப்பு, மற்றும் 
 படம் வரைதல் கற்க வேண்டும்.


வெற்றி பெற வேண்டியவை 

1.எளிதாக வேலை செய்து வெற்றி அடைய 
 வேண்டும்.
2.தன்னம்பிக்கையும்,விடாமுயற்சியும்.
3.உறுதியான சோர்வடையாத உடலும் மனமும்.


சோர்வு நீக்க தேவையானவை

1.மெல்லிய இனிமையான இசை
2.இணையத்தில் உலாவுவது.
3.நகைச்சுவை விஷயங்கள் பார்ப்பதும் 
 படிப்பதும்.


எப்போதும் தயாராக இருக்க வேண்டியது  


1.புன்னகை தவழும் முகம்.
2.இனிமை கலந்த பேச்சு.
3.நலம் விசாரித்து உதவும் குணம்..


முன்னேற்றத்திற்கு தேவை   

1.எளிதாக வேலை செய்து வெற்றி அடைய 
 வேண்டும்.
2.தன்னம்பிக்கையும்,விடாமுயற்சியும்.
3.உறுதியான சோர்வடையாத உடலும் மனமும்.


எப்போதும் அவசியமானது 


1.புன்னகை தவழும் முகம்.
2.இனிமை கலந்த பேச்சு.
3.நலம் விசாரித்து உதவும் குணம்..


பிடித்த தத்துவம் 


1.எண்ணங்கள் சிறப்பாக இருந்தால் 
 செயல்களும் சிறப்பாகவே அமையும் (என் 
 தத்துவம்.)
2.உடம்பின் ஒரு செல் கூட மற்றவரின் 
 அதிகார சொல்லால் அழியக்கூடாது. 
 (இதுவும் என் தத்துவம்.).
3.எது நடந்ததோ..? அது நன்றாகவே நடந்தது..! 
 (கீதாச்சாரம் )


தெரிந்து தெரியாது குழப்புவது 

1.கணிதம்.
2.ஒரு வேலை சரியாக செய்து 
 முடித்திருப்பின் மீண்டும் அது தவறா.?  
 சரியா..?என குழம்புவது.
3.கனவில் நடந்த விஷயம் நிஜத்தில்  
 மீண்டும் நடக்கும் போது.

எரிச்சல் படுத்துபவர்கள்

1.சொன்ன விசயத்தையே மீண்டும் மீண்டும் 
 சொல்பவர்கள்..
2.தற்பெருமை பேசுபவர்கள்.
3.சொன்ன சொல் தவறுபவர்கள்.


மனங்கவர்ந்த பாடகர்கள்


1.உன்னிக்கிருஷ்ணன்
2.ஹரிஹரன்.
3.கார்த்திக். எஸ்.ஜானகி..சுதா ரகுநாதன் 
 சுசித்ரா..(இன்னும் பட்டியல் நீளும்.)


இனிமையானவை 


1.பழைய நினைவுகளை மனதில் அவ்வபோது 
 மனதில் அசை போடுவது.
2.தூங்குகின்ற இரவு நேரம்.
3.கவிதை எழுதும்போது நல்லவரிகள் மனதில் 
 உதிக்கும்நேரம்.


சாதித்தவர்களின் பிரச்சனைகள் 


1.தனிமனித சுதந்திரம் பறிபோதல்.
2.சாதனையை தக்கவைக்க தடுமாறுதல்.
3.கிசுகிசுக்கள் அவர்களை தினமும் பந்தாடுதல்.


பிடித்த பழமொழிகள்


1.ஈன்றபொழுதில் பெரிதுவக்கம் தன் மகனை 
 சான்றோன் என கேட்ட தாய்.
2.இன்னா செய்தாரே ஒருத்தர் அவர் நாண 
 நன்னயம் செய்து விடல்...
3.களவும் கற்று மற.  
  
இது போல் பதிவிட நான் அழைக்கும் நண்பர்கள்..

தஞ்சை வாசன்..

மணிஅஜித்

மாணிக்




7 கருத்துரைகள்:

செய்தாலி said...

உங்களின் முத்தான மூன்று முடிச்சு எல்லாம் நல்லா இருக்கு கவிஞரே
நான் ஏற்கனவே ஹாசிமை அழைத்துவிட்டேன்
நீங்களும் அளித்தி இருப்பது மகிழ்ச்சி

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

வலைத்தளம் மிகவும் அருமை.. பார்க்கும்போதே காதல் கொள்ள செய்கிறது... காதல் சின்னம் மழையாய் எங்களையும் நனைக்கிறது...

உங்களுடைய பதில்கள் அனைத்தும் அருமை...

ஒவ்வொன்றிக்கும் எனது பதில்களை தெரிவிக்க நினைத்தாலும்.. நேரம் இல்லாத காரணத்தினால் ஒன்றை மற்றும் கூறிக்கொள்கிறேன்...

// அடைய விரும்பும் நிலையான விருப்பங்கள்

1.தனி மனிதனாய் பிறந்தேன்.நல்ல மகனாய்,
நல்ல தந்தையாய் இறக்கவேண்டும்.
2.ஒருமுறையேனும் எனது வரிகள்
திரைப்படத்தில் அரங்கேற வேண்டும்.
3.மகிழ்ச்சியான நிலையிலேயே என் மரணம்
வேண்டும்.//

நானும் இறைவனிடம் வேண்டுகிறேன்...

1. தனி மனிதனாய் பிறந்தேன்.நல்ல மகனாய்,
நல்ல தந்தையாய், தாத்தாவாக மற்றும் எனக்கும் நல்ல நண்பனாக இருக்கவேண்டும்.

2. ஒருமுறை அல்லாது பலப்பாடல்கள் ஒலிக்க வேண்டும். நாங்கள் கேட்க வேண்டும்.. நீங்களும் தேனிக்கு பெருமை சேர்க்க வேண்டும்...

3. மரணத்தில் மட்டுமல்லாது என்றென்றும் மகிழ்ச்சியாகவும் வாழவும் வாழ்த்துகிறேன்...


அன்போடு,
தஞ்சை.வாசன்

தேனி"சூர்யா"பாஸ்கரன். said...

என் அன்பு அழைப்பிற்காக இங்கு வந்த நண்பர் தஞ்சை வாசனுக்கு நன்றி..தங்களின் வாழ்த்துக்கும் நன்றி.நண்பா..இது போல் நீங்களும் உங்கள் தளத்தில் பதிந்து நான் மற்றும் நண்பர்கள் அழைக்காத நபரை தேர்ந்து எடுத்து அவர்களை அழையுங்கள்..வாசா..
அப்போது நான் உங்களின் முத்தான மூன்று முடிச்சு..வந்து பார்க்கிறேன்...

தேனி"சூர்யா"பாஸ்கரன். said...

நண்பர்..செய்தாலி..அவர்களே..உங்களின் அன்புக்கு என்றும் என் வணக்கங்கள்...உங்களின் வாழ்த்துக்கும் என் நன்றிகள்.. நான் முதலில் ஹாசிம் அழைத்துவிட்டு சந்தேகத்தின் பேரில் உங்கள் தளம் பார்த்தேன்..அப்போது நீங்கள் அழைத்து உள்ளதை பார்த்து உடனே நான் நண்பரை தற்போது மாற்றிவிட்டேன்..மீண்டும் உங்கள் தளம் வந்து பார்க்கிறேன் உங்களின் பொன்னான மூன்றுமுடிச்சுகளை...என்றும் அன்புடன்..சூர்யா..

தமிழ்த்தோட்டம் said...

முத்தான மூன்று அருமை

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

தேனி"சூர்யா"பாஸ்கரன். said...

நன்றி..நண்பரே..!

Dr goma said...

நிங்கள் அடைய விரும்பும் நிலையான விருப்பங்கள் அனைத்தும் நிரைவெற வாழத்துகிறேன்.

Post a Comment

உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.