இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்)
உயிரற்ற உரைநடையான என்னை
உன் உண்மையன்பால் வாசித்து.. 
உயிர்கொண்ட கவிதை போல எனை
      உயிர்ப்பெள செய்து விடு.. அதை தினமும் 
      ஒருமுறை நீ என்னை வாசித்து விட்டுப்போ..!அதன் மூலம்
      நான் தினமும் சுவாசித்துக் கொள்கிறேன்..

     நான் படிக்கும் புத்தகத்தில் சில எழுத்தில்..
      உன் பெயரின் எழுத்தை..கண்டறிந்து..
      அதை குண்டு எழுதாக்கி..நான் தினமும்
      இதய அறையில் வாசிக்கின்றேன். வேதமாக
      நீ வாசிக்கின்ற புத்தகத்தில் என் பெயர் வசிக்கின்றதா...? 
        
      முகவரிகள் இல்லாத முகமாய்...மனதை
      மூடி வலி மறைத்து நான் செல்கையில்..உன்
      முகவரியாய் நான் இருப்பதை...உன்
      முக வரி காட்டுகிறதே..! நீ அதை அறிவாயா..?
               
      அங்கிருந்து நான் நகருகையிலே..
      சோகவரியாய்..உன் முகம்..! உன்னருகில் இருக்கையில்
      சுகவரியாய்.. உன் முகம்..! உன்னுள் நான்
      முழுதாய் மூழ்கியுள்ளேனா..?

      அன்று..     
      உன்னை எழுப்பும் அலாரமாய்..
      சில நாட்கள் நான் இருந்தபோது
      இவ்வுலகை எழுப்பும் சூரியனானேன்..என         
      தினம் தினம் கர்வம் கொண்டேன்..
      இன்று..
      உன்னை எழுப்பமுடியா என் விடியலும்
      அஸ்தமனமாகி போனதோ..? அந்த சூரியனும்..
      கடலுக்குள் அமிழ்ந்து கரைந்து போனதோ..?
      உனக்கும் தினமும் விடிகின்றதோ...?
  

0 கருத்துரைகள்:

Post a Comment

உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.