உள்ளத்திற்குள் ஒளித்து வைக்கும்
உண்மைகள் உரக்கசொல்லாமல்
ஊமையாய் மாறி உறவாடாமல்..
உறங்குகின்றன..அந்தரங்கமாய்.
வெளிஉலகம் நம்மை
வேடிக்கை பார்த்திடும் என
வெளிவராத உண்மைகள்..
உள்ளுக்குள்.. அந்தரங்கமாய்.
அந்தரங்க உண்மைகள்
அவிழ்க்கப்படும் போது தானும்
அந்தரங்கத்தில்..என்பதால்...என்னவோ..
அவிழ்க்கப்படமுடியா முடிச்சாய்...
அவரவர் ஆழ்மனதில்..அது.
அந்தரங்கம் அழகானது...அந்த
அரங்கமெங்கும் அன்பாய் நிறைந்த போதும்.
அன்பானவரிடம் அது மதிக்கப்படும் போதும்
அந்தரங்கம் அழகானது...
புரியாதபோது புனிதமாக தெரிவதும்
புரிந்தபின் அவர்களை புதிராக நினைப்பதும்.
அந்தரங்கம் அழகானது...
உள்ளன்பில் அது உறங்கும் போதும்
அற்புதங்கள் அதில் இருக்கும் போதும்
ஆசைகளை ஒழித்து..அன்பை நிறைத்து..
ஈனச்செயல் அழித்து..ஈகைச்செயலை சேர்த்து..
பண்பாடற்றதை ஒதுக்கி..பாசங்கள் புகுத்தி..
அந்தரங்களை அன்பாய்..மாற்றிவிடு..
அற்புதங்கள் அதனோடு கலந்துவிடு.
அந்தரங்களை அழகாய் மாற்றிவிடு..அதை
அரங்கத்தில் சேர்த்து புனிதமாக்கி விடு.
1 கருத்துரைகள்:
அருமை பாராட்டுக்கள் தொடரட்டும் உங்கள் படைப்புகள்
Post a Comment
உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..