இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


நரைத்த காதல்.






உன் காதின் ஓர சில நரைமுடி கூட
என் காதல் ஓரத்தில் பல கவிதை பாடுகிறது.
அங்கொன்றும்இங்கொன்றும் முளைத்திருந்தாலும்
அழகாய் தானடி தெரிகிறாய்...அதுனுள்...நீயும்.
      
இதில் மட்டும் என்ன..விதிவிளக்கு..?
கருப்பென்றால் பிடிக்கின்ற மயிரிலைகள்
வெறுப்பென்று ஆகிவிடுமோ..? இயற்கையாய்..  
வெண்மையாக மாறும்போது..?

இளமைக் காலத்தில் பயிரிட்ட காதல்
முதுமைக் காலத்தில் முழுமையடைந்து   
வெண்மை நிற நாற்றாய் விளைந்து நிற்கிறதோ..?.

மோகக்காதலுள் முளைத்திட்ட அன்பு..
முக்தி நிலையில் பரவசமாய்..வெண்மையாய்.
வெள்ளிக்கம்பியாய்..பரவி தெளிக்கிறதோ..?

காதலாய்..அன்பாய்..கடைந்தெடுத்துகசிந்துருகி..
இன்பமாய்பொங்கிபாசமாய் வெண்ணிற 
கோடுகளாய்.மாறி தெறித்து வெளுத்து நிற்கிறதோ..?

நம் காதலின் உண்மையின் மேன்மையை
வெண்மையாய் உரைத்திடும் அந்த
நரைத்த மயிர்களை கருமையிட்டு
மறைத்திடாதே..! நம் காதலின்
சாட்சியினை வண்ணம் பூசி கரைத்திடாதே..!

நரைத்த மயிரிலைக்குள் தூய்மையாய்..  
செழித்து வளர்ந்த நம் காதலை
மறைத்து விடாதே.! நம் அன்பின் முழுமையை
குறைத்து காட்டிடாதே..!.




0 கருத்துரைகள்:

Post a Comment

உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.