புத்தாண்டு பிறக்கட்டும்...
புன்னகைப் பூக்கள் பூக்கட்டும்..
புதுவரவாய் நாம் ஏங்கிய
தமிழீழம் மலரட்டும்..
ரத்தச்சகதி கலந்த மண்ணில்
புத்தமெனும் பூக்கள் பூக்கட்டும்..
மனிதச்சதைகள் தின்ற மண்ணில்
மனிதநேயம் மீண்டும் வளரட்டும்.
முடங்கிப்போன எங்கள் இனத்தின்
முதுகெலும்புகள் இனி நிமிரட்டும்..
முகத்திரை அகலட்டும்..எங்கள்
அகத்திரையில் மகிழ்ச்சி பரவட்டும்..
அமைதிப்போர் நடக்கட்டும்.-நம்
அன்பின் வலிமை வெல்லட்டும்..
அதில்..ஆளுகின்ற கூட்டத்தின்
ஆணிவேர் அழுகட்டும்..அழியட்டும்.
மீண்டும் ஓர் யுத்தம்.கொண்டு
மீதமுள்ள சந்ததியை புதைத்திடாமல்.
புத்த வேதம் கையில் கொண்டு
புது உலகம் படைத்திடுவோம்..
எல்லோர்க்கும் எல்லா ஆண்டும்
இனியதாக அமையட்டும்..எங்களுக்கு
இந்த வருடம் தமிழீழ சுதந்திரம்.-ஒரு
சாவில்லா சுதந்திரமாய் கிடைக்கட்டும்-
போரில் சாய்ந்து இறந்தவர்க்கு அது
மனச்சாந்தி அமைதியும் தரட்டும்.
தளிர்த்த,.தளிர்க்கும் இளந்தளிர்க்கு
சந்தோச நிகழ்வு இனி உண்டாகட்டும்.
1 கருத்துரைகள்:
கண்டிப்பாக மலரும் சாந்தி நிலவும்
அனைத்துக்கும் காலம் பதில் சொல்லும்
அருமையான கவிதை தோழா நன்றி
Post a Comment
உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..