இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


நீ தான் என் நினைவெல்லாம்...தீயை உடையாய் அணிந்தவளும்..நீ தான்!..
என் செந்தமிழின் சிறப்பு எழுத்தும்.. நீ தான்!..
புல்வெளி பனித்துளியாய் இருப்பவளும்நீதான்!..

என் கண்ணின் கருவிழியாய் இருப்பவளும் நீதான்!..


மௌனத்தின் யுத்தத்தில் பிறக்கும் சப்தம் நீதான்!..-என்
வாலிபத்தோட்டத்தில் வசந்தமாய் வருபவளும் நீ தான்!..
நாள்தோறும் நான் கேட்கும் மெல்லிசை நீ தான்!..-
என் மேனி மீது மோதிச் செல்லும் மேகமும் நீ தான்!..

நான் வளர்க்கும் தோட்டத்தில் பூக்கள் எல்லாம் நீ தான்!..நான்
தொட்டவுடன் தொட்டச்சிணுங்கியாய் மாறியவளும் நீ தான்!..
மலருக்குள் மறைமுகமாய் இருப்பதும் நீ தான்!..-என்
மனதுக்குள் திருமுகமாய் இருப்பதும் நீ தான்!..

சப்தம் தரும் மௌனமும் நீ தான்!..- 
சாரல் தரா மழைத்துளியும் நீ தான்!..
கோடிப்பூக்கள் கூடி உண்டான இனியமலர் நீதான்!..-
என் காதலில் காதலும் நீ தான்!..

தூங்கிவழியும் மலர்களை தென்றலாய். எழுப்பி விட்டவளும் நீ தான்!..-என் தேகத்தின் உணர்ச்சி நரம்பினை உலுக்கி விட்டவள் நீ தான்!..மௌன மொழி தன்னை மைவிழியால் மனதில் வரைந்தவளும் நீதான்!.. 


என் தங்கத்தின் தன்மைதனை தனக்குள் வைத்திருப்பவள் நீ தான்!..
தேசப்பற்றின் உண்மைதனை என் உள்ளத்தில் தெளித்துவிட்டவள்..நீதான்!. நீ தான் என் நினைவெல்லாம்..

0 கருத்துரைகள்:

Post a Comment

உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.