சுகமான சுமையாய் சுமந்திருந்து-நீ
சுவாசிக்கின்ற காற்றில் ஒரு பகுதி தந்து..
உந்தன் உடலையும் உயிரையும் உருக்கி...
எந்தன் உடலையும் உயிரையும் உருவாக்கி...-பிறந்த என்னை
பெண்ணென்ன அறிந்ததும் மனம் கலங்காமல்
மண் வீதியில் விட்டேறிந்தவளே..!
உந்தன் உடலையும் உயிரையும் உருக்கி...
எந்தன் உடலையும் உயிரையும் உருவாக்கி...-பிறந்த என்னை
பெண்ணென்ன அறிந்ததும் மனம் கலங்காமல்
மண் வீதியில் விட்டேறிந்தவளே..!
என் அன்னையே!..நீ அன்னையா..?
பெண்மைக்குரிய தாய்மையை..
பொய்மைக்குள் புதைத்துவிட்டு..
வறுமை என்ற கொடுமையை...
வள்ளலாய் வழங்கி சென்றவளே.!-
அரும்புபோல் துளிர்த்த என்னை...சிறு
துரும்பு போல் தூக்கி எறிந்தவளே..
என் அன்னையே!..நீ அன்னையா..?
அன்று–காமப்பசியில் நீ யோசிக்க தவறியதால்..
இன்று யாசிக்கிறேன்...“பிச்சை” என்ற பெயரோடு.
ஆணாக பிறக்காத என்னை...அரசாங்கம் நடத்தும்
அரசுத்தொட்டிலில் நீயிட்டிருந்தால்..
பெண்மைக்குரிய தாய்மையை..
பொய்மைக்குள் புதைத்துவிட்டு..
வறுமை என்ற கொடுமையை...
வள்ளலாய் வழங்கி சென்றவளே.!-
அரும்புபோல் துளிர்த்த என்னை...சிறு
துரும்பு போல் தூக்கி எறிந்தவளே..
என் அன்னையே!..நீ அன்னையா..?
அன்று–காமப்பசியில் நீ யோசிக்க தவறியதால்..
இன்று யாசிக்கிறேன்...“பிச்சை” என்ற பெயரோடு.
ஆணாக பிறக்காத என்னை...அரசாங்கம் நடத்தும்
அரசுத்தொட்டிலில் நீயிட்டிருந்தால்..
எச்சில் தொட்டியருகே அமர்ந்து பசிக்காக.,
ஏங்கிக் கொண்டுருக்கமட்டேன்..!-நாய்களோடு..
ஏங்கிக் கொண்டுருக்கமட்டேன்..!-நாய்களோடு..
என் அன்னையே!..நீ அன்னையா..?
தாய்ப்பாலையும்..தமிழ்ப்பாலையும் தராதவளே!.-
உன் காமத்துப்பாலால் உண்டான இந்த பெண்பாலை புறக்கணித்தது ஏன்.?
என் அன்னையே!..நீ அன்னையா..?
மேலும் இரண்டு முடிவுகள்..
1.கருவறை விட்டு வந்த போது நீ
கள்ளிப்பால் தந்து எனை கொன்றிருந்தால்..
உன் மனம் போன்ற கல்லாகிப்போன
கயவர் நிறைந்த இந்த கான உலகினை
நான் காணாமல் சென்றிருப்பேன்...
2.தாய்ப்பால் தராமல் உன் அன்னை உனக்கு
பெண்ணென்று.. கள்ளிப்பால் தந்திருந்தால்
இந்த தவறுகள் கருவுற்றிற்காதோ..?
0 கருத்துரைகள்:
Post a Comment
உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..