இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


நீயும் ஒரு மகாத்மா..!

 
உன்னில் தேடு..!உன்னில் தேடு..!உன்னில் தேடு..!
உண்மையின் மறு உருவினை உன்னில் தேடு..!
       
ஒழுக்கத்தின் பிறப்புறுப்பினை உன்னில் தேடு..!
ஒன்றேமதம் எனும் உன்னதத்தை உன்னில் தேடு..!
சாதிப்பிரிவினை ஒழிய அதன் சாவிதனை உன்னில் தேடு..!
சாஸ்திர சூழ்ச்சி திறக்க சாவுதனையும் உன்னில் தேடு..!

மனிதநேயத்தை வளர்க்கும் மகத்துவத்தை உன்னில் தேடு..!
வெற்றியை விழிக்கச் செய்ய வியர்வையை உன்னில் தேடு..!
விழுகின்ற வியர்வைகளில் விருட்சத்தை உன்னில் தேடு..!
செழுமையான தேசமாக்க எளிமையை உன்னில் தேடு..!

சேரிப்பூக்களை கோவில் சேர்க்க நேசத்தினை உன்னில் தேடு..!   
வெறுப்பினை அழித்திடும் அன்பினை உன்னில் தேடு..!
வறுமை கண்டு எழுந்திடும் வீரத்தை உன்னில் தேடு..!
வளமான வாழ்விற்கு நேர்மையை உன்னில் தேடு..!

பாமரனின் தோள் தூக்கி விடும் பண்பினை உன்னில் தேடு..!
பகட்டான வாழ்வை தொலைக்க தன்னலத்தை..உன்னில் தேடு..!
தாய் தந்தை தெரியாத..,தான் யாரென்று புரியாத 
தளர்ந்த தளிர்க்கு உதவிட கருணையை உன்னில் தேடு...!

உன்னில் தேடியவை உனக்குள்ளே கிடைத்திட்டால்..-இந்த
மண்ணில் நீயும் ஒரு மகாத்மாவே..! உன்னை தொடரும்
சந்ததிகள் நெஞ்சில் நீயும் இதை விதைத்திட்டால்..
நம் தேசம் முழுவதும் இனி..மகாத்மாக்களே..!

2 கருத்துரைகள்:

செய்தாலி said...

நம்பிக்கை ஊட்டும் வரிகள்

More Entertainment said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.in

Post a Comment

உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.