மணம்
மலர்களின்
மனம் அறிகின்ற வேளையில் –
இந்த மங்கையின் மணம்
வீசுகின்றதே..!
உன் நினைவுகள்
காலைப்
பனி காற்று போல ...உன் நினைவுகள் என்னை தினம் கட்டுண்டு கிடக்கச் செய்கின்றனவே..!
வார்த்தைகள்
ஒரு
நொடி உன் பார்வை எனை தாக்குகிறது. அதில் ஓராயிரம் வார்த்தைகள்
நடைபயிலுகிறது...!
என்
விழிகள்
சுவாசிக்க
காற்றிருந்தும், சுற்றத்தார் அருகிலிருந்தும்..சுழலுகிறது..
என்
விழியிரண்டும்..உன்னைக் காண..
பசிபிக் கடல்
பசிபிக்
கடலாய் இருந்த மனம் –
என்னவளின்
பார்வையால்
பாலைவன ஊற்றாய் மாறியதே.!
இதயம்
பக்கத்தில் நீ வந்தால்
பதறுகிறது..இதயம்..- நீ
பார்வையை
விலக்கிக் கொண்டால் பரிதவிக்கிறது இதயம்...
1 கருத்துரைகள்:
ம்ம்ம் ...
கவிதை அருமை
Post a Comment
உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..