ஒற்றை சிகப்புரோஜா..
ஒரு துளி வெண்பனி..
மிதமான தென்றல் காற்று..
இதமான இனிய
இசை..
மௌனமாக உறங்கும் இரவு..
மெல்லிய மழைச்சாரல்..
வெண்ணிற வான்மேகம்..
வெதுவெதுப்பான காலை கதிர்..
ஒளிர்ந்து செல்லும் நிலா..
ஒளியில்லா என் அறை..
கடற்கரை தொடும் அலை..
காலை வருடும் குளத்து மீன்..
ஆளில்லா பயணப்பேருந்து..
அயர்ந்து நான் தூங்கும் மாந்தோப்பு..
மயிலிறகின் ஸ்பரிச தொடல்..
குயில்குரலில் ததும்பும் இசை..
இந்த இன்பங்களின் மத்தியில்..நான்..
இன்னொன்றை...உணர்கின்றேன்.
இதுவரை அது எதுவென
புரியாமல் இங்கும் அங்கும்
அலைகின்றேன்..எது..எது..யென்று
ஏங்கிமனம் வலித்தாலும்.
அது..அதுவே..யென்று யாரேனும்
அதைப்பற்றி சொல்லமாட்டீரோ..?
0 கருத்துரைகள்:
Post a Comment
உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..