இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


ஒப்பிடத்தான் தோன்றுதடி. (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..)


உன் நெற்றிப் பொட்டில்
சூரியனை எரியவிட்டவன் நானே..!

உன் புருவத்தில் கருநிற
வானவில் வரைந்தவன் நானே..!

உன் மண் தொடும் கூந்தலில்..
மேகத்தை திணித்து விட்டவன் நானே..!

உன் மூக்கின் முக்கில்
நட்சத்திரத்தை ஜொலிக்க வைத்தவன் நானே..!

உன் கண்களுக்குள் குளிர்ச்சியாய்..
பனிமலையை கொட்டியவன் நானே..!

உன் கன்னக்குழிக்குள்
நீர்ச்சுழல் சுழலவிட்டவன் நானே..!

உன் உடலை மேடு பள்ள காடான
பாலைவனமாய் மாற்றிவிட்டவன் நானே..

உன் பாலைவன உடலில் வற்றாத
பாலாறும்,தேனாறும் பாயவிட்டவன் நானே..!

உன் மௌனத்தில் மென்மையான
தென்றலை திரியவிட்டவன் நானே..!

உன் கோபத்தில் கடுமையான
சூறாவளியை சுழலவிட்டவன் நானே..!

உன் சிரிப்பினிடையில் சாரலாய்
மழையை பொழிந்தவன் நானே..!

உன் ஒடிகின்ற இடைதன்னில்
கொடிமலரை வளரவிட்டவன் நானே..!

உன் பாதத்தின் இதத்தோடு..
தாமரை இதழை இணைத்துவிட்டவன் நானே..!

உன் நடையின் அடிச்சுவடை கண்டு நடைபயின்ற
அன்ன பறவையை அழித்தவன் நானே..!

உன் முகத்தின் வடிவழகில்
முழுநிலவில் குறைகண்டவன் நானே..!


மூன்று முடிவுகளோடு..

முதல் முடிவு

நானே..நானே..என்று இறுமாப்புடன்..
நான் யார்..? கடவுளா..? கவிஞனா..?
காதலனா..?

இரண்டாம் முடிவு.

              பெண்ணே..இந்த பிரபஞ்சம்..நீதானே..!
இப்படி உனை புகழ்பவனை.
ஒருமுறை நீ வர்ணித்தது உண்டா..?
உந்தன் பிரபஞ்சம் நான் என்று. 

மூன்றாம் முடிவு.
                      
உன் வாய் வார்த்தையோடு
வாக்கிய இசையையும்..
உன் இதழ்களோடு வழிந்தோடும்
வற்றாத தேன்சுவையும் சேர்த்த என்னை..

உன் இதயத்தோடு மட்டும் சேர்க்க..
உன்னால் முடியாதது..ஏனோ..?


உங்களுக்கு பிடித்தது முடிவு எது..?

0 கருத்துரைகள்:

Post a Comment

உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.