இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


எப்போது நாம் சுவாசிப்போம்..?!






நண்பனே..! இது..
மண்ணில் நம் கொடி நிற்க..
மரணத்தை மகிழ்வோடு தழுவிய
மைந்தர்கள் பிறந்த நாடு..!

நண்பனே! இது..
தேசம் காக்கச் சென்று..தன்
தேகம் காக்க மறந்து போன..
தேசத்தியாகிகள் பிறந்த நாடு..!

நண்பனே! இது..
தோலால் செய்யப்பட்ட உடலை
துச்சமென நினைத்து..
துப்பாக்கித் தோட்டாக்களுக்கு ..
துணிவோடு கொடுத்த
துளிர்கள் பிறந்த நாடு!..

நண்பனே..! இது..
மண்ணில் மனித உரிமை
மரம் போல் வளர்ந்து நிற்க..நம்
மண்ணுக்குள் உரமாகி போன..
மகாத்மாக்கள் பிறந்த நாடு..!

இது தெரிந்தும் ..
ஏன் எந்த தயக்கம்?..
ஏன் இந்த கோழைத்தனம்?.

இந்த..
இரக்கமற்ற ..மனிதர்களை..
இரத்த வெறி மிருங்கங்களை..
அழிக்காமல்...எப்போது நாம்
சுவாசிப்போம்..! சுதந்திரக்காற்று ?
இறங்கி வா இப்போதே..

நண்பனே!
முயற்சிப்போம்..மகாத்மா போல்.
உயிரை கொடுத்து சுதந்திரம் பெற..
இல்லையேல்.. இரக்கமற்ற ..
மனிதர்களின்..இதயத்தை துளைத்தெடுத்து
சுதந்திரம் பெறுவோம்..

3 கருத்துரைகள்:

vazeerali said...

நண்பனே!
முயற்சிப்போம்..மகாத்மா போல்
உயிரை கொடுத்து சுதந்திரம் பெற..
இல்லையேல்.. இரக்கமற்ற ..
மனிதர்களின்..இதயத்தை துளைத்தெடுத்து
சுதந்திரம் பெறுவோம்..
உண்மையான வார்த்தைகள் தோழரே .தொடருங்கள் .
கலைநிலா

தமிழ்த்தோட்டம் said...

அருமையான சிந்தனை பகிர்வுக்கு நன்றி நண்பரே

தேனி"சூர்யா"பாஸ்கரன். said...

உங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி..நண்பரே..

Post a Comment

உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.