மடியில் உனை கிடத்தினால்..
மருவி கிடந்திட செய்கிறாய்..! உனக்குள்
மடிந்து கிடந்திடும் உலகத்தை கண்டு
மகிழ்ந்திட செய்கிறாய்..!
உன்னை திறந்து உனக்குள் புகுந்தால்
உள்ளுக்குள் எனை புதைக்கிறாய்.!- என்
உறக்கத்தை தினம் தொலைக்கிறாய்..!
உலகில் சிறகாய் பறக்கச் செய்கிறாய்..!
உலகம் உனக்குள் அடக்கமென..
உன்மேல் ஊர்ந்தபோது உணர்த்தினாய்..!
உன்னை ஒரு நொடி பிரிந்தாலும்
உயிரோடில்லை..என் உலகம்..
என் இனிய மடிகனியே..!
என் இனிய மடிக்கணினியே..!
என் உலகத்தை உயிர்த்திடு..!
என் உலகத்தை நீ காத்திடு..!
1 கருத்துரைகள்:
மடிகணிணி விருப்பப்பட்ட கனியாகிவிட்டதா பாஸ்கரா..
ஆனாலும் ரசிக்க வைத்த வரிகள்பா....
இணையத்தை பிரயோஜனமா உபயோகப்படுத்தினால் கண்டிப்பா அது நமக்கு நல்லதே செய்யும் என்பதுக்கு உதாரணமாய் அமைத்த வரிகள் சிறப்பு.....
உலகமே கைக்குள் அடக்கமாகிவிடுகிறது தானே??
உறக்கம் தொலைத்து உண்ண மறுக்கவும் செய்துவிடுகிறது....
அழகிய கவிதைக்கு அன்பு வாழ்த்துகள் பாஸ்கரா....
Post a Comment
உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..