இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


தூண்டல்கள்
அன்பானவனே.!
            அற்பத்தனமான சின்ன
            விசயங்களை மனதில்
            சில நேரம் நினைக்கையிலே
            அற்புதமான சந்தோசத்தை.
            அள்ளிஅள்ளித் தெளிக்கிறதே...
            
            உன்னுடன் சாலையில்
            நான் இணைந்து நடந்து செல்கையிலே..
            என்னுடலில் எதிர்பாராமல்  
            உன் விரல் உரசி உண்டான
            உணர்வு தூண்டல்கள்..
            
            கடலலையை நான் துரத்தி.. 
            விடலை போல் துள்ளிக்குதித்து,
            தடுமாறி விழும் வேளையிலே..
            என்னிடை தொட்டு இழுத்தபோது
            எனக்குள் ஏற்பட்ட மின்னர்திர்வுகள்..
            
            அருகருகே அமர்ந்து..
            அறிவியல் பாடத்தை..
            ஆராய்ந்த வேளையிலே..
            அங்கும் இங்குமாய்..
            அடிக்கடி புத்தகத்திலே
            அடிதடி நடத்திய நம்
            விரல்களில் உருவான
            மின்னோட்டங்கள்..
           
            பாடத்தின் விளக்கத்தை நாம்
            பகிர்ந்துகொள்ளும் வேளையிலே-உன்
            பார்வை விளக்கால்.. இந்த
            பாவையின் கண்பாவையில்
            ஏற்றிய மின்ஒளிக்கற்றைகள்..

            தவறுகளோடு நான்
            தடுமாறிய வேளையிலே.-
            தவறிலிருந்து என்னை
            தனித்து வைத்து,என்
            தலைநிமிர வைக்க..நீ என்
            தலையில் செல்லமாய் 
            தட்டியதில் உண்டான
            மின்காந்தபுலங்கள்..
                    
            எனக்குள் ஏற்பட்ட தூண்டல்கள்
            உனக்குள் ஏற்படாததால்..நீ..
            மகிழ்வோடு கழுத்தில் மாலையோடு
            மற்ற ஒரு பெண்ணோடு..
            மணாளனாய்..மேடையிலே.

            இன்றும் என்னை நோக்கி நீ சிந்திய
            இன்ப புன்னகை கூடஎன்னுள் தூண்டியது பல
            இன்ப அதிர்வுகளை..அதை.. ரசித்தபடியே..
            கையில் அன்பளிப்போடும்,அட்சதையோடும்
            உன் கல்லூரித்தோழியான...நான்..

0 கருத்துரைகள்:

Post a Comment

உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.