இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


கரை சேரா ஓடங்கள்



கூவத்து பக்கத்திலே..நம்ம குடிச இருந்தாலும்..
உசந்த இடத்தில..உன்னத்தான் தங்க வச்சு படிக்கத்தான்
உன்ன வைக்க தினம் கால் வயிறு கஞ்சி குடுச்சேன்..
                 
குடிகார உங்கப்பன் கூத்தியளோட சேர்ந்திருக்கான்..
குடிக்க தினமும் காசு நான் தந்தா..
குடித்தனம்..எங்கக்கூடயாம்..
குடிக்க காசு தந்துட்டா..உன்ன படிக்க யார் வைப்பா..?
                
அரசாங்க வேல..கிடைக்காம போயடுமெனு
பள்ளிக்கூட படிப்ப பாதியில நிறுத்திப்புட்டு
சாக்கடைய அள்ள வச்சான்...சண்டாளன்..எங்கப்பன்..
சாகுற வர எம்பொலப்பு சாக்கடைன்னு ஆனாலும்..
                
ஊருக்குள்ள உள்ள அழுக்க கழுவ
கொஞ்சம் என்னால முடிஞ்சது..மனுச
உடம்புக்குள்ள உள்ள அழுக்க கழுவ
யார் இருக்கா..ஊருக்குள்ள..?

கூவத்தில பிறந்த மக..கோட்டையில கொடி ஏத்துவா...
நம்ம குறையெல்லாம் தீர்ப்பான்னு..மனக்கோட்டை கட்டி
வச்சிருந்தேன்..பாவி மக சிறுக்கி...! நீ படிப்பை பாதியில
நிறுத்திப்புட்டு காதல்ல சிக்கி ஓடிப் போனாயே..!
என்னயும்..தல முழுகி தனியாளா ஆக்கினாயே..!


எப்போது நாம் சுவாசிப்போம்..?!






நண்பனே..! இது..
மண்ணில் நம் கொடி நிற்க..
மரணத்தை மகிழ்வோடு தழுவிய
மைந்தர்கள் பிறந்த நாடு..!

நண்பனே! இது..
தேசம் காக்கச் சென்று..தன்
தேகம் காக்க மறந்து போன..
தேசத்தியாகிகள் பிறந்த நாடு..!

நண்பனே! இது..
தோலால் செய்யப்பட்ட உடலை
துச்சமென நினைத்து..
துப்பாக்கித் தோட்டாக்களுக்கு ..
துணிவோடு கொடுத்த
துளிர்கள் பிறந்த நாடு!..

நண்பனே..! இது..
மண்ணில் மனித உரிமை
மரம் போல் வளர்ந்து நிற்க..நம்
மண்ணுக்குள் உரமாகி போன..
மகாத்மாக்கள் பிறந்த நாடு..!

இது தெரிந்தும் ..
ஏன் எந்த தயக்கம்?..
ஏன் இந்த கோழைத்தனம்?.

இந்த..
இரக்கமற்ற ..மனிதர்களை..
இரத்த வெறி மிருங்கங்களை..
அழிக்காமல்...எப்போது நாம்
சுவாசிப்போம்..! சுதந்திரக்காற்று ?
இறங்கி வா இப்போதே..

நண்பனே!
முயற்சிப்போம்..மகாத்மா போல்.
உயிரை கொடுத்து சுதந்திரம் பெற..
இல்லையேல்.. இரக்கமற்ற ..
மனிதர்களின்..இதயத்தை துளைத்தெடுத்து
சுதந்திரம் பெறுவோம்..

என் இனிய மடிகனியே..!



              
 மடியில் உனை கிடத்தினால்..
 மருவி கிடந்திட செய்கிறாய்..! உனக்குள்
 மடிந்து கிடந்திடும் உலகத்தை கண்டு
 மகிழ்ந்திட செய்கிறாய்..!

 உன்னை திறந்து உனக்குள் புகுந்தால்
 உள்ளுக்குள் எனை புதைக்கிறாய்.!- என்
 உறக்கத்தை தினம் தொலைக்கிறாய்..!
 உலகில் சிறகாய் பறக்கச் செய்கிறாய்..!
                                
 உலகம் உனக்குள் அடக்கமென..
 உன்மேல் ஊர்ந்தபோது உணர்த்தினாய்..!
 உன்னை ஒரு நொடி பிரிந்தாலும்
 உயிரோடில்லை..என் உலகம்..
          
 என் இனிய மடிகனியே..!
 என் இனிய மடிக்கணினியே..!
  என் உலகத்தை உயிர்த்திடு..!
 என் உலகத்தை நீ காத்திடு..!
   

            
          

காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா”






காதலிக்கநேரமில்லை!.கண்ணே!.. நம் நாட்டை
கயவர்களிடமிருந்து மீட்கும் வரை..
 
கல் மூலம் கண்ட தெய்வம் கொண்டு..
கண்ணுக்குத்தெரியாத வடிவங்கள் கொண்டு தினம்
கலவரங்கள் செய்பவர்களை மத வியாதியில்லாத..
மனிதனாக மாற்றும் வரை..

மதவாத வெறிகொண்டு மாண்டு போகின்ற..
மடையர்களை..மனிதநேயம் கொண்ட
மனிதனாக மாற்றும் வரை..

அமைதிப்பூங்காவாம்..இந்தியாவை
ஆயுதம்கொண்டு அழிக்கின்ற புயல் காற்றை..
அமைதி எனும் அன்பு கொண்டு
அடக்கி ஆளும் வரை..
அழகான நதியான மதங்களுக்குள் - தினம்
அழுக்கடைந்த அரசியல் சாக்கடையை கலக்கி
அமுதத்தை விஷமாக்கும் அந்த
அரசியல் நயவஞ்சர்களை..
அன்பானவர்களாக மாற்றும் வரை...

காதலிக்க நேரமில்லை!..கண்ணே!..


இங்கு மட்டும் தான்..




இங்கு மட்டும் தான்..
மீன்கள் தூண்டில் போட..
மீனவர்கள் மாட்டிக் கொள்கின்றனர்.

                          
இங்கு மட்டும் தான்..

மான்கள் வேட்டையாட..
புலிகள் இரையாக்கப்படுகின்றன.


இங்கு மட்டும் தான்..
மலர்கள் விழுந்து..
முட்கள் காயமாகின்றன.


இங்கு மட்டும் தான்..

ஆறுகள் கலக்கப்பட்டு..

கடல்களும் நன்னீராக்கபடுகின்றன.

                       

இங்கு மட்டும் தான்..
அன்பு எனும் ஆயுதம்கொண்டு..
இதயங்கள் இடம் பெயர்க்க படுகின்றன.
                    


எங்கு..????..........................  
.............................................
...............................காதலில்.

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.