இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


Showing posts with label பொதுவான கவிதை. Show all posts
Showing posts with label பொதுவான கவிதை. Show all posts

அயல்தேச அனுபவம்..



வறுமையை தோண்டி..அடியோடு
புதைத்திட வேண்டி..வளமையை..
வாழ்வில்..இணைத்திட வேண்டி..  
               
கரைகளை தாண்டி..வாழ்வில்
கரையேற வேண்டி..
கடல் கடந்து வந்தோம்..!
கனவோடு வந்தோம்..!  

ஒட்டிக்க்கிடந்த பாசத்தை.
வெட்டிக்கொண்டு வந்தோம்..
கட்டு கட்டாய் பணம் கிடைக்கும்
என மதியிழந்து பிரிந்தோம்..!
  
இயந்திரத்தின் இதயமாகி
இரவும் பகலும் உழைத்தோம்..
இலட்சியத்தை அடைய தினம்
செத்து செத்து பிழைத்தோம்..!
  
பணமொன்றை கண்டோம்.அதை
தின்று பிணமாகிப்போனோம்..
மனமொன்றை புரியாமல்
ஈனமாகி வாழ்ந்தோம்..!

கைநிறைய பணமிருந்தும்
மனம் வறுமையோடு கிடந்தோம்...!
பந்தங்களும் பாசங்களும்
தொலைக்க கிடைத்த பணம்.
நம் கையில் என அறிந்து
வெட்கித் தலைகுனிந்து
கூனிக்குறுகி நின்றோம்..!
 

பெண்ணின் பசுமை நினைவுகள்..


கருவறையில் நான் செய்த..வன்முறையை -என்
கருத்தம்மாவின் பொற்காலம் என அவள் சொன்னதுண்டு.

தவழும் மழலையாய் நான் தாவி ஏறிய நெஞ்சை தடவி   தந்தையும் அதை பொற்காலம் என சொன்னதுண்டு.
அப்படியே நானும் இருந்திருக்கலாமோ.!?
          
ஆற்றுப்படுகையிலே ஊற்றுத் தோண்டி களித்ததும்         
கிணற்றுக்கரையிலே தோழியோடு ஆடி குளித்ததும்
நெஞ்சை விட்டு நீங்கிடுமோ...?
          
பருவமெய்திய வயதில்..எந்தன்..         
பெண்மையோடு புதிதாய் நாணமும்...ஒட்டிக்கொள்ள
பெரியவள் ஆணேனோ..? என்று என்னை எண்ணி
பிரமித்த தருணங்கள் விலகிடுமோ..?    
          
மனம் புரியா பருவத்தில் துளிர்ந்த ஈர்ப்பு காதலும்-அது
மடத்தனமென உரைத்த குடும்ப பாசமும்...மறக்க முடியுமோ..?

இளவயதில் அன்பை எனக்குள் கொட்டிவனோடு திருமணமும்.
இரு உயிர்க்குள் ஒரு உயிர்ப்பூ பூத்திட்ட நேரமும்..
இதயத்தை விட்டு... என்றும் இடம் பெயர்ந்திடுமோ..?
             
தடி ஊன்றி நடக்கின்ற இந்த தள்ளாத வயதிலே..என் மேல்
தாளாத..தணியாத அன்பு முத்தம் பொழிபவனே..!என்னவனே..!
மீண்டும் கிடைத்திடுமோ..? இன்னொரு மானிடவாழ்வு..?
மாண்டு மீண்டுப் பிறந்திடுவேனோ...? இந்த உலகிலே..!  

நான் செய்த பொங்கல்..



கபடமில்லா உடலெனும் பாத்திரம் கொண்டு..
களங்கமில்லா உள்ளமெனும்..நீரை ஊற்றி
வெள்ளை மனம் கொண்ட அரிசி கொண்டு.
மங்களமாய் முகம் போல பாசிப்பருப்பும்

இனிய பேச்சாய் வெல்லம் சேர்த்தும்..
அன்பாய் ஆசையாய் கிஸ்மிஸ் இணைத்து..
அரவணைப்பாய் முந்திரியும் அதனோடு
நேர்மை எனும் நெய் சேர்த்து..

உண்மை,உழைப்பு எனும் விறகு கொண்டு..
நம்பிக்கை எனும் அடுப்பில் வைத்து..
நட்பெனும் தீ மூட்டி நியாயமாக பேசும்
காற்று ஊதி..நயமாய் சமைத்திடுவோம்..

நான்கு திசையும் அது பொங்குவது போல..நம்
நாளைய திசைகளை நலமாய்ப் செய்திடுவோம்.
அளவுக்கு மீறிய அன்பு கொண்டு.. திகட்டாத தேன்சுவை பொங்கல் செய்வோம்..-அதை திகட்டத்திகட்ட எல்லோர்க்கும் பகிர்ந்தளிப்போம்..



என் இனிய மடிகனியே..!



              
 மடியில் உனை கிடத்தினால்..
 மருவி கிடந்திட செய்கிறாய்..! உனக்குள்
 மடிந்து கிடந்திடும் உலகத்தை கண்டு
 மகிழ்ந்திட செய்கிறாய்..!

 உன்னை திறந்து உனக்குள் புகுந்தால்
 உள்ளுக்குள் எனை புதைக்கிறாய்.!- என்
 உறக்கத்தை தினம் தொலைக்கிறாய்..!
 உலகில் சிறகாய் பறக்கச் செய்கிறாய்..!
                                
 உலகம் உனக்குள் அடக்கமென..
 உன்மேல் ஊர்ந்தபோது உணர்த்தினாய்..!
 உன்னை ஒரு நொடி பிரிந்தாலும்
 உயிரோடில்லை..என் உலகம்..
          
 என் இனிய மடிகனியே..!
 என் இனிய மடிக்கணினியே..!
  என் உலகத்தை உயிர்த்திடு..!
 என் உலகத்தை நீ காத்திடு..!
   

            
          

எனது முத்தான மூன்று முடிச்சு ..(கலை அண்ணாவின் அன்பு வேண்டுகோள்கிணங்க.)







பிடித்த உறவுகள்


1.பெற்றோர்.
2. மனைவியும், மகனும்.
3. நண்பர்கள்.


பிடித்த உணர்வுகள்.                


1.அன்பு பொங்கி அழுகின்ற உணர்வு.  
2.பிடித்த இசையில்   கரையும் உணர்வு.
3.கவிதையில் நுழைந்து திரியும் உணர்வு.


பிடிக்காத உணர்வுகள்.            

1.எப்போதும் அமைதியாக இருக்கும் உணர்வு.
2.மனது சொல்வதை உடல் செய்யாத உணர்வு.
 3.எதிர்காலத்தை பற்றி எப்போதும் நினைக்கும் 
 உணர்வு.


முணுமுணுக்கும் பாடல்கள் 

1.புது வெள்ளை மழை.(ரோஜா )
2.அனல்மேலே பனித்துளி(வாரணம் ஆயிரம் )
3.பூக்கள் பூக்கும் தருணம்.(மதராச பட்டிணம்)
 (இனிய மெல்லிசை காதல் பாடல்கள் 
 அனைத்தும்)


பிடித்த திரைப்படங்கள்


1.குருதிப்புனல்
2.காதலுக்கு மரியாதை..
3.வாரணம் ஆயிரம்.


அன்புத் தேவைகள்


1.அன்பானவர்களிடமிருந்து அன்பு மட்டுமே.
2.என் அன்பின் ஆழம் 
 தெரியவர்களிடமிருந்தும்.அன்பு மட்டுமே.
3.என்றும் அவர்களின் உறவும்..உன்னதமான 
 அன்பும்.


வலிமையை அழிப்பவை


1.காதல்..
2.தூக்கம். 
3.துக்கம்.


குட்டித் தத்துவம்


1.உனக்கென வாழ்வதை உன்   
 உள்ளத்திலிருந்து  எடுத்து விடு.
2.அன்பே மதம்...நட்பே வேதம்...
3.எச்சங்களின் இன்பமே உலகாகும்..
 இவ்வுலகில் மாறாத நியதி இதுவாகும்.


பயமுறுத்தும் பயங்கள்


1.தனிமையான வாழ்க்கை.
2.நட்போடிருந்து புறம் பேசுவது.
3.நம்பிக்கை துரோகம்


அடைய விரும்பும் நிலையான விருப்பங்கள்

1.தனி மனிதனாய் பிறந்தேன்.நல்ல மகனாய் 
 நல்ல தந்தையாய் இறக்கவேண்டும்.
2.ஒருமுறையேனும் எனது வரிகள் 
 திரைப்படத்தில் அரங்கேற வேண்டும்.
3.மகிழ்ச்சியான நிலையிலேயே என் மரணம் 
 வேண்டும்.


கற்க விரும்புவது


1.தமிழ்மொழி தவிர மற்றமொழிகளும் கற்க 
 வேண்டும்.
 2.மனிதர்களின் மனம் பற்றி கற்க வேண்டும். 
3.கணிணி துறையில் வடிவமைப்பு, மற்றும் 
 படம் வரைதல் கற்க வேண்டும்.


வெற்றி பெற வேண்டியவை 

1.எளிதாக வேலை செய்து வெற்றி அடைய 
 வேண்டும்.
2.தன்னம்பிக்கையும்,விடாமுயற்சியும்.
3.உறுதியான சோர்வடையாத உடலும் மனமும்.


சோர்வு நீக்க தேவையானவை

1.மெல்லிய இனிமையான இசை
2.இணையத்தில் உலாவுவது.
3.நகைச்சுவை விஷயங்கள் பார்ப்பதும் 
 படிப்பதும்.


எப்போதும் தயாராக இருக்க வேண்டியது  


1.புன்னகை தவழும் முகம்.
2.இனிமை கலந்த பேச்சு.
3.நலம் விசாரித்து உதவும் குணம்..


முன்னேற்றத்திற்கு தேவை   

1.எளிதாக வேலை செய்து வெற்றி அடைய 
 வேண்டும்.
2.தன்னம்பிக்கையும்,விடாமுயற்சியும்.
3.உறுதியான சோர்வடையாத உடலும் மனமும்.


எப்போதும் அவசியமானது 


1.புன்னகை தவழும் முகம்.
2.இனிமை கலந்த பேச்சு.
3.நலம் விசாரித்து உதவும் குணம்..


பிடித்த தத்துவம் 


1.எண்ணங்கள் சிறப்பாக இருந்தால் 
 செயல்களும் சிறப்பாகவே அமையும் (என் 
 தத்துவம்.)
2.உடம்பின் ஒரு செல் கூட மற்றவரின் 
 அதிகார சொல்லால் அழியக்கூடாது. 
 (இதுவும் என் தத்துவம்.).
3.எது நடந்ததோ..? அது நன்றாகவே நடந்தது..! 
 (கீதாச்சாரம் )


தெரிந்து தெரியாது குழப்புவது 

1.கணிதம்.
2.ஒரு வேலை சரியாக செய்து 
 முடித்திருப்பின் மீண்டும் அது தவறா.?  
 சரியா..?என குழம்புவது.
3.கனவில் நடந்த விஷயம் நிஜத்தில்  
 மீண்டும் நடக்கும் போது.

எரிச்சல் படுத்துபவர்கள்

1.சொன்ன விசயத்தையே மீண்டும் மீண்டும் 
 சொல்பவர்கள்..
2.தற்பெருமை பேசுபவர்கள்.
3.சொன்ன சொல் தவறுபவர்கள்.


மனங்கவர்ந்த பாடகர்கள்


1.உன்னிக்கிருஷ்ணன்
2.ஹரிஹரன்.
3.கார்த்திக். எஸ்.ஜானகி..சுதா ரகுநாதன் 
 சுசித்ரா..(இன்னும் பட்டியல் நீளும்.)


இனிமையானவை 


1.பழைய நினைவுகளை மனதில் அவ்வபோது 
 மனதில் அசை போடுவது.
2.தூங்குகின்ற இரவு நேரம்.
3.கவிதை எழுதும்போது நல்லவரிகள் மனதில் 
 உதிக்கும்நேரம்.


சாதித்தவர்களின் பிரச்சனைகள் 


1.தனிமனித சுதந்திரம் பறிபோதல்.
2.சாதனையை தக்கவைக்க தடுமாறுதல்.
3.கிசுகிசுக்கள் அவர்களை தினமும் பந்தாடுதல்.


பிடித்த பழமொழிகள்


1.ஈன்றபொழுதில் பெரிதுவக்கம் தன் மகனை 
 சான்றோன் என கேட்ட தாய்.
2.இன்னா செய்தாரே ஒருத்தர் அவர் நாண 
 நன்னயம் செய்து விடல்...
3.களவும் கற்று மற.  
  
இது போல் பதிவிட நான் அழைக்கும் நண்பர்கள்..

தஞ்சை வாசன்..

மணிஅஜித்

மாணிக்




தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.