இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


Showing posts with label சீர்த்திருத்த கவிதைகள். Show all posts
Showing posts with label சீர்த்திருத்த கவிதைகள். Show all posts

நீயும் ஒரு மகாத்மா..!

 
உன்னில் தேடு..!உன்னில் தேடு..!உன்னில் தேடு..!
உண்மையின் மறு உருவினை உன்னில் தேடு..!
       
ஒழுக்கத்தின் பிறப்புறுப்பினை உன்னில் தேடு..!
ஒன்றேமதம் எனும் உன்னதத்தை உன்னில் தேடு..!
சாதிப்பிரிவினை ஒழிய அதன் சாவிதனை உன்னில் தேடு..!
சாஸ்திர சூழ்ச்சி திறக்க சாவுதனையும் உன்னில் தேடு..!

மனிதநேயத்தை வளர்க்கும் மகத்துவத்தை உன்னில் தேடு..!
வெற்றியை விழிக்கச் செய்ய வியர்வையை உன்னில் தேடு..!
விழுகின்ற வியர்வைகளில் விருட்சத்தை உன்னில் தேடு..!
செழுமையான தேசமாக்க எளிமையை உன்னில் தேடு..!

சேரிப்பூக்களை கோவில் சேர்க்க நேசத்தினை உன்னில் தேடு..!   
வெறுப்பினை அழித்திடும் அன்பினை உன்னில் தேடு..!
வறுமை கண்டு எழுந்திடும் வீரத்தை உன்னில் தேடு..!
வளமான வாழ்விற்கு நேர்மையை உன்னில் தேடு..!

பாமரனின் தோள் தூக்கி விடும் பண்பினை உன்னில் தேடு..!
பகட்டான வாழ்வை தொலைக்க தன்னலத்தை..உன்னில் தேடு..!
தாய் தந்தை தெரியாத..,தான் யாரென்று புரியாத 
தளர்ந்த தளிர்க்கு உதவிட கருணையை உன்னில் தேடு...!

உன்னில் தேடியவை உனக்குள்ளே கிடைத்திட்டால்..-இந்த
மண்ணில் நீயும் ஒரு மகாத்மாவே..! உன்னை தொடரும்
சந்ததிகள் நெஞ்சில் நீயும் இதை விதைத்திட்டால்..
நம் தேசம் முழுவதும் இனி..மகாத்மாக்களே..!

இரவல் இடமா.?!..என் இதயம்..?!



இனியவளே..!

உந்தன் கண்ணீரை சுமக்க..
என் கன்னத்திற்கு இடம் கொடு..!
உன் வலிகளை சுமக்க..
என் மார்பிற்கு இடம் கொடு..!

உன் உள்ளத்தை சுமக்க..
என் இதயத்திற்கு இடம் கொடு..!
உன் சோகத்தை சுமக்க
என் தேகத்திற்கு இடம் கொடு..!

உன் பாவங்களை சுமக்க..
என் பாதத்திற்கு இடம் கொடு..!
உன் உடலை சுமக்க..
என் உடலிற்கு இடம் கொடு..!

என்று சொன்னவனே..!
உன்னன்பு உண்மையென்று..
என்னை தந்ததற்கு..என்னுள்
இளைப்பாறி ஏமாற்றிச்சென்றாயே..?-என்
இதயம் இரவலென நினைத்தாயோ.?

அந்த இரவலுக்கு இணையாக..
இன்னொரு துணையை எனக்குள்
நீ கொடுத்தாயோ..?

இறைவா..!
இருவரின் தவறில் உதித்திட்ட ஒரு
உயிரின் பாவத்தின் கணக்கதினை
உரு கொடுக்கும் பெண்ணில் ஏன்
முழுவதுமே இணைத்தாய்..!
அத்தவறின் பிணக்குகளின் பாதியை 
ஆணோடு பிணைத்திருக்ககூடாதா..?
ஆண்களும் அந்த அல்லல் சுமைதனை
அனுபவிக்கக் கூடாதா..?




பெண்ணே..நீ..விளக்கு..!




மங்கையே..!
     
மங்கையாய் நீ பிறந்ததால் இந்த
மண்ணுலகம் மகிழ்ச்சியடையட்டும்..!
பூவையாய் நீ பிறந்ததால் இந்த
பூலோகம் பெருமையடையட்டும்..!

அடுப்படிக்குள்  அடைபட்டு..
மூன்று முடிச்சில் சிறைபட்டு..
சின்னத்திரைக்குள் சிதைக்கப்பட்டு..உன்
எண்ணமெல்லாம் புதைக்கப்பட்டு..
                            
சேய் தரும் இயந்திரமாகி..
தினம் இரவில் படுக்கையாகி..
காலம் தள்ளியது போதும்..!
வெளி உலகம் பார்..!
வெளிச்சமின்றி உள்ளது..நீயின்றி
வெறுமை கண்டே உள்ளது..!
      
பெண்மையின் பெருமையை..
மங்கையின் தன்மையை இந்த
உலகம் புரிய ஏற்று..!
உலகம் விளங்க ஏற்று..!
உன் அறியாமை விலக ஏற்று..
ஒளியை விளக்கில்.            
             
உன் எண்ணம் உலகம் அறிய.
பெண்ணே நீ விளக்கு..!
அன்பாய் விளக்கு..! அறிவாய் விளக்கு..!
தெளிவாய் விளக்கு..என்றும் தெரிவாய்..
அதில் நீ விளக்காய்...!
             

தினமும் அன்பின் தினமே..!


             
சில காதல் இயற்கையின் பிடிப்புகளில்..
சில காதல் எண்ணத்தின் எழுத்துகளில்..
சில காதல் பாசத்தின் வெளிபாடுகளில்..
சில காதல் நட்பின் எழுச்சிகளில்..
சில காதல் குறும்புகளின் கொக்கரிப்புகளில்..
சில காதல் நகைச்சுவையின் ஈர்ப்புகளில்..    

சில காதல் குடும்ப உறவின் பிணைப்புகளில்..
சில காதல் ஈகைமன வசிப்புகளில்..
சில காதல் ஒழுக்கத்தின் உயிர்ப்புகளில்...
உருவானாலும் "அன்பு" ஒன்றே.
அவற்றின் உருவகம். -அந்த
            
அன்பின் வேதம் கொண்டு..
அழகாய் காதல் கொண்டு..
வேசமில்லா நேசம் கொண்டு..
வாழ்வின் இறுதிவரை இந்தஅன்பை 
தினமும் பரிமாறிக் கொண்டால்.
நமக்கு..தினமும் அன்பின் தினமே..!

காதல் ஜோதி




மனமில்லா மனிதா.!


மனம் கொள்ளும் காதல் பற்றி

அறிவாயோ..நீ..!..
அச்சடிக்கப்பட்ட காகிதத்திற்காக
ஆசைகளை சுமந்து வரும்
அரும்புகளை கிள்ளி விடாதே!..

மதம் எனும் மதம் பிடித்த நீ
மனம் கொண்ட காதலை..
மண்ணோடு மாய்த்து விடாதே!..
              
ஜாதி என்ற சாக்கடையில்
புரளுவதை நிறுத்தி விட்டு
காதலுக்கு ஜோதி ஏற்று!..

அந்த ஜோதி எண்ணையிட்டு
எரியும் விளக்காக இருக்கக்கூடாது!..

உனை உள்ளம் உள்ள மனிதனாக...
உலகிற்கு காட்டும் உன்னதமான..

உயர்ந்த ஜோதியாக இருக்கட்டும்..!

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.