இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


Showing posts with label முன்னுரை. Show all posts
Showing posts with label முன்னுரை. Show all posts

தமிழின் முன்னுரை


அன்னையே...நீ.. அதிசயங்களின் பாசறை
அன்பின் கருவறை..என் அழகுத் தமிழின் முன்னுரை..

கண்ணுக்கு தெரிகின்ற கடவுள் நீ தானே..! சில நிமிடம் நான்காணாமல் போனாலும் கண்உறக்கம் இழப்பவள் நீ தானே..!

ஐந்திரு மாத கருவறையில் என்னை காத்தவள் நீ தானே..! என் ஐம்புலன் நலமின்றியும் எனை அழகனென்பவள் நீ தானே..!

மழலையாய் செய்த தவறை மகிழ்வோடு ரசித்தவள் நீ தானே..! இன்றுமமதையால் நான் செய்த தவறால் என்னோடு கலங்குபவள் நீ தானே..!

பயணங்கள் தரும் சோகங்களில் நிழலாய் தொடர்பவள் நீ தானே..!
பயன்படாதவன் ஆனாலும் பாசமாய் இருப்பவள் நீ தானே..!

கல்லில் தடுக்கி விழுந்தபோது அந்த கல்லை அடித்தவள் நீ தானே..!
கண்ணீல் தூசு பட்டால் கலங்குபவளும் நீ தானே..!

வேலையின் தாமதத்தில் சில நிமிடம் ஆனாலும்
வீட்டுக் கதவின் நிலையாய் மாறுபவள் நீ தானே..!.

உண்மையன்பு ஊறுகின்ற ஊற்று நீ தானே..!
உனக்கு உதவாதவன் நானாலும் என்
உச்சிமுகர்ந்து மீது முத்தம் தருபவள் நீ தானே..!

தொலை தூர பயணத்திலே என்னோடு
திருநீறாய் வருபவள் நீ தானே..! அந்த திருநீறும்
கண்ணில் பட்டு கலங்கிடுமோ கண்..? என அதை ஊதி கலைத்தவள்.. நீ தானே..!

அன்போடு,தமிழ்ப்பண்போடு,தேசப்பற்றோடு என்
தேகத்தை வளர்த்தவளே..! இது உனக்கான 
முன்னுரையும் ..எனக்கான முகவுரையும்...

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.