இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


கைம்பெண்ணின் காதல் க(வி)தை-2


   

     கல்லூரி வரை என் வாழ்வோடு
     கலந்திட்டவனே...என்
     காலம் முழுதும் என்னோடு
     கலந்திட மாட்டாயா..?
     வேலைக்காக வெளிநாடு
சென்றவனே,,! என் மன
வேதனையை அறிந்திடாயோ.? 

    இல்லற வாழ்க்கையிலே..
    என் மன சம்மதமின்றி..
    இனி இது தான் வாழ்வென
    ஏற்றுக் கொண்ட ஒருவரோடு..
    நல்வாழ்க்கை வாழும் முன்..
    நாசமாகி போனதே.!. திடீரென     
    உண்டான இதயத்தின் வலிதனில்
    அவரிதயம் செயலிழந்து போனதே..
    என் வாழ்வும் பொலிவிழந்து போனதே..!

   எல்லாம் முடிந்ததென்று..
   என்னிலை நினைத்து அழுதிடுகையில்
   என்னருகில் வந்து சேர்ந்தாய்..
   என் நிலை கண்டு துவண்டு போனாய்..
   துடிதுடித்துப்போனாய்..அதோடு.

   வடிகின்ற கண்ணீரை துடைத்த உன்
   விரல்கள்..வதங்கிய என் முகத்தை
   தாங்கிய உன் தோள்கள்..
   “உன் வாழ்வு முடியவில்லை..
   என்னோடு தொடரும் இனி.”   
   என்றுரைத்த உன்பேச்சு.    
   எப்போதும் வேண்டுமென
   என் மனம் ஏங்கினாலும்..

   ஊராரின் பேச்சுக்குள்...
   உலகத்தின் பார்வைக்குள்..  
   ஊமையாகிப்போன என் காதலும்
   ஊனமாகிய என் வாழ்வும்..மீண்டும்
   தளிர்த்து விட்டால்..வேசங்கள் பல
   எனக்கிட்டு இட்டு வேசியின் நிலையில்
   நிறுத்திடுவர். யாரோ தவறுதலால்
   ஏற்பட்ட சிதறல்களாய் என் வாழ்வு..!

    
      உன் வாழ்வு நலமாகட்டுமென..
      உன்னை மறுத்து..என் மனதை
      மண்ணில் புதைத்து...மீண்டும் நான்
       மரணித்து வாழ்கிறேன்..உன் நினைவோடு.
       விதவை எனும் பெண்ணின் நிலை..
       என்றுமே..இதுவே என நினைத்து..
       சில நேரம் விக்கித்து அழுகிறேன்.



கைம்பெண்ணின் காதல்..க(வி)தை-1


விபரமறியா பருவத்தில்..
விளைந்திட்ட உறவுக்குள்..
விளையாட்டுத் தனத்தோடு..  
இடையிலே..கைகோர்த்து
கடைவீதியை அளவெடுத்து..
நடந்து செல்கையிலே..நம்மில்
முளைத்திட்ட முத்தங்களை
பிரியமென்று நாம் நினைத்ததுண்டு
                
பள்ளிப்பருவத்திலே..
பருவமெய்திடாத நேரத்திலே
சேர்ந்து படித்திட்ட பள்ளிக்குள்
பகிர்ந்திட்ட நம் கல்விக்குள் கலந்திட்டதை
அன்பென்று நாம் சொன்னதுண்டு.

கல்லூரிப் பருவத்திலே..
காதல்படும் வயதிலே..நல்ல
வாழ்வு வேண்டுமென்று
நல்விடயத்தை நாமும்
நலமாய் படித்திட்டு
நம்மெய் மறந்து.இணைந்து திரிந்ததை
நட்பென்று நாம் சொன்னதுண்டு.


திருமண வயதினிலே...
இருமன இணையும் நேரத்திலே
உன் மனம் வேண்டுமென்று
என் மனது தவிக்கிறதே..
அன்பென்று..பாசமென்று..
நட்பென்று..நினைத்ததன்று..
காதலாய் இன்று மாறியதோ....?

                 ( தொடரும்.. )

நரைத்த காதல்.






உன் காதின் ஓர சில நரைமுடி கூட
என் காதல் ஓரத்தில் பல கவிதை பாடுகிறது.
அங்கொன்றும்இங்கொன்றும் முளைத்திருந்தாலும்
அழகாய் தானடி தெரிகிறாய்...அதுனுள்...நீயும்.
      
இதில் மட்டும் என்ன..விதிவிளக்கு..?
கருப்பென்றால் பிடிக்கின்ற மயிரிலைகள்
வெறுப்பென்று ஆகிவிடுமோ..? இயற்கையாய்..  
வெண்மையாக மாறும்போது..?

இளமைக் காலத்தில் பயிரிட்ட காதல்
முதுமைக் காலத்தில் முழுமையடைந்து   
வெண்மை நிற நாற்றாய் விளைந்து நிற்கிறதோ..?.

மோகக்காதலுள் முளைத்திட்ட அன்பு..
முக்தி நிலையில் பரவசமாய்..வெண்மையாய்.
வெள்ளிக்கம்பியாய்..பரவி தெளிக்கிறதோ..?

காதலாய்..அன்பாய்..கடைந்தெடுத்துகசிந்துருகி..
இன்பமாய்பொங்கிபாசமாய் வெண்ணிற 
கோடுகளாய்.மாறி தெறித்து வெளுத்து நிற்கிறதோ..?

நம் காதலின் உண்மையின் மேன்மையை
வெண்மையாய் உரைத்திடும் அந்த
நரைத்த மயிர்களை கருமையிட்டு
மறைத்திடாதே..! நம் காதலின்
சாட்சியினை வண்ணம் பூசி கரைத்திடாதே..!

நரைத்த மயிரிலைக்குள் தூய்மையாய்..  
செழித்து வளர்ந்த நம் காதலை
மறைத்து விடாதே.! நம் அன்பின் முழுமையை
குறைத்து காட்டிடாதே..!.




சாவில்லா தமிழீழம்

 
புத்தாண்டு பிறக்கட்டும்...
புன்னகைப் பூக்கள் பூக்கட்டும்..
புதுவரவாய் நாம் ஏங்கிய
தமிழீழம் மலரட்டும்..
                   
ரத்தச்சகதி கலந்த மண்ணில்
புத்தமெனும் பூக்கள் பூக்கட்டும்..
மனிதச்சதைகள் தின்ற மண்ணில்
மனிதநேயம் மீண்டும் வளரட்டும்.
                                                   
முடங்கிப்போன எங்கள் இனத்தின்
முதுகெலும்புகள் இனி நிமிரட்டும்..
முகத்திரை அகலட்டும்..எங்கள்
அகத்திரையில் மகிழ்ச்சி பரவட்டும்..
                                     


அமைதிப்போர் நடக்கட்டும்.-நம்
அன்பின் வலிமை வெல்லட்டும்..
அதில்..ஆளுகின்ற கூட்டத்தின்
ஆணிவேர் அழுகட்டும்..அழியட்டும்.
                  
மீண்டும் ஓர் யுத்தம்.கொண்டு
மீதமுள்ள சந்ததியை புதைத்திடாமல்.
புத்த வேதம் கையில் கொண்டு
புது உலகம் படைத்திடுவோம்..

எல்லோர்க்கும் எல்லா ஆண்டும்   
இனியதாக அமையட்டும்..எங்களுக்கு
இந்த வருடம் தமிழீழ சுதந்திரம்.-ஒரு
சாவில்லா சுதந்திரமாய் கிடைக்கட்டும்-

போரில் சாய்ந்து இறந்தவர்க்கு அது
மனச்சாந்தி அமைதியும் தரட்டும்.
தளிர்த்த,.தளிர்க்கும் இளந்தளிர்க்கு
சந்தோச நிகழ்வு இனி உண்டாகட்டும்.









நான்..நீ...(உதடுகள் ஒட்டா கவிதை )



காதல் சகியே..! 
நான் நீயே...!
நீ என் நாளையே..!
நீ என் இதயத்தில் தென்றல்..
நீ என் நிசத்தின்.. நிழல்..
நீ  என்  நேசத்தின் காதல்..
            
நீ கண்கள் கலங்க...கலங்கினேன் நான்.
நீரில்லா கடலில்..கடற்கரை இல்லை
நீயில்லா சரித்திரத்தில்..இனி நானில்லை...
                   
சாலையில் சில நேரங்களில்
என்னை தேடி திரிகிறேன்..கரைகிறேன்...நான்
நீ..கிள்ளிய காதல் குழந்தை நான்.
சிணுங்குகிறேன்.. கட்டிலில் ...
         
இசை சாரல் தெளித்து என்னுள் இறங்கு..என்
இசையாய்... தென்றலாய்..

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.