இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


வாழ்வியல் கணிதம்..!



 
வாழ்வில் அன்பை கூட்டிக்கொள்..!அந்த (+)
கூட்டல்கள் ஈட்டித் தரும்.. உனக்கு சந்தோஷத்தை.

வாழ்வில் நட்பை பெருக்கிக் கொள்..!அந்த (× )
பெருக்கல்கள் உன் வாழ்வு முடிந்த பின்பும்..
வாழும் அவர்கள் நெஞ்சில்..

வாழ்வில் வாழும் முறைகளை (÷ )
வகுத்துக் கொள்..அந்த
வகுத்தல்கள் உன் வாழ்வை வளர்பிறையாக்கும்..

வாழ்வில் சோகத்தை கழித்துக் கொள்..! அந்த (-)
கழித்தல்கள், உன்னை அழித்தல்கள்
இல்லாத ஓவியமாய் காட்டும்.

வாழும் வாழ்வினை சமமாக்கி கொள்..(=)
வேறுபாடு இல்லாத சமூகம் வேரில்
கிளைதளைக்க அது பயன்படும்.

வாழ்வின் ஏற்ற இறக்கங்களை கண்டுகொள்..(< >)
உன்னை வார்த்தெடுத்த தங்கமாய்
மாற்றி அமைக்கும்..
 
வாழ்வின் குறைநிறைகளை கண்டறிந்து கொள்..(+-)
வசந்தமாய்..உன் வாழ்வு மாற அது வகை செய்யும்

தலைப்பில்லா கவிதை




    காதலியே..!
    நீ எனக்காக பிறந்த கிளி..
    நான் உனக்காக வாழும் புலி..
    காதல் அம்பை எய்தது உனது விழி.
    நான் தப்பிக்க இனி இல்லை வழி.

    உனது அழகிய பாதங்களுக்கு இணை பீலி.
    நீயே.. எனது காதலி.
    எல்லோருக்கும் வாழ தேவை..வளி.
    நான் வாழ தேவை..உனது சிரிப்பொலி..

உன் மனதில் ஏன் இன்னும் கிலி..?
என் இதயகோட்டையில் இடம் காலி.
    அவ்விடத்தில் நீ ஏற்று..காதல் ஒளி.
உனைபார்த்த நாள் முதல் ஆகிவிட்டேன்..
    கவிஞர் வாலி.

    நான் சொல்வது இல்லை போலி.
    பெண்ணே..இன்னுமா..மன உறக்கம்..? விழி..
என் இதயத்தை திருடி வாங்கு..பழிக்குப் பழி.
நாள் பார்த்து கட்டுவேன்..உனக்கு தாலி.

    அதை பார்த்து மேகம் விடும் ஆனந்த நீர்த்த்துளி.
    பிறகு நாம் செல்லும் அறை..பள்ளி.
    நீயே எனக்கு என்றும் வேலி..
    நான் தேடிச் செல்லேன் வேறு ஒரு தோழி.

    இனி ஊரார் நம்மை பார்த்து பேசமுடியாது..கேலி.
    நாம் வாழ்க்கை இனி ஜாலி..ஜாலி..

எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு ( காதல் )



ஜன்னலின் கவிதை..

 நீ வலம் வரும் தெருவில் உள்ள -என்
 வீட்டு தெருவோர ஜன்னலும்
 உன்னால் தினந்தோறும் கவிதைகள் பாடுதடி..!
 என்னுடைய புலம்பல்கள் தாங்காமல்..

போதைப்பூக்கள்

 நீ செல்கின்ற பாதையில் தினம்
 கோடிப் கவிதைப்பூக்கள் பூக்கின்றது...!
 நீ சொல்கின்ற வார்த்தையில் தினம்
 கோடிப் போதைப்பூக்கள் பூக்கின்றது..! என் மனதில்.
              

         அக்னியின் உற்சவம்

 அக்னியின் உற்சவ நாட்களில் ..உன்
 அழகுப் பாதங்கள் ஒரு அடி எடுத்து வைத்தாலும்..
 அல்லல் படுகிறது...!– என் மனம்.    

                        மழைச்சாரல்

 உன் நினைவுகள்...மழையில் பிரியும் சாரல் போல.
 என்னுள் சுகமாய்...குளிராய்...மென்மையாய்..     
 என்றும் மழைக்காலம் தான்..எனக்குள்ளே...
                       
                       மவுனம்

 நீ பேசாமல் பேசும் பேச்சு கூட பலநேரம்
 போதையை உண்டாக்குகிறது..எனக்குள்...
 நீ தான் உலகின் போதையுள்ள பேதையோ..?

உயிரோடு உலவுகிறேன்..


    

     உந்தன் சிரிப்பு தான் ..
     எனை தினமும்  சிரிக்க வைத்தன...

     உந்தன் கண்கள் தான் ..
     எனை தினமும் கவிதை எழுத வைத்தன..

     உந்தன் கோபம் தான்..
     எனை தினமும் கோழையாக்கின..

     உந்தன் மௌனம் தான்..
     எனை தினமும் சோகமாக்கின..

     உந்தன் பேச்சு தான்..
     எனை தினமும் மழலை யாக்கின..

     என்றும் ...எப்பொழுதும்...
     உன் நினைவுகள் தான்...

     எனை உலகில் உயிரோடு..
     உலவச் செய்கின்றன...

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.