இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


டைட்டானிக் காதல்


நினைவுகளும் கனவுகளும்


கற்பனையா என் கவிதை..?


வெட்கத்தில் வெள்ளை ரோஜா


கொலுசு சப்தம்


நீயும் ஒரு மகாத்மா..!

 
உன்னில் தேடு..!உன்னில் தேடு..!உன்னில் தேடு..!
உண்மையின் மறு உருவினை உன்னில் தேடு..!
       
ஒழுக்கத்தின் பிறப்புறுப்பினை உன்னில் தேடு..!
ஒன்றேமதம் எனும் உன்னதத்தை உன்னில் தேடு..!
சாதிப்பிரிவினை ஒழிய அதன் சாவிதனை உன்னில் தேடு..!
சாஸ்திர சூழ்ச்சி திறக்க சாவுதனையும் உன்னில் தேடு..!

மனிதநேயத்தை வளர்க்கும் மகத்துவத்தை உன்னில் தேடு..!
வெற்றியை விழிக்கச் செய்ய வியர்வையை உன்னில் தேடு..!
விழுகின்ற வியர்வைகளில் விருட்சத்தை உன்னில் தேடு..!
செழுமையான தேசமாக்க எளிமையை உன்னில் தேடு..!

சேரிப்பூக்களை கோவில் சேர்க்க நேசத்தினை உன்னில் தேடு..!   
வெறுப்பினை அழித்திடும் அன்பினை உன்னில் தேடு..!
வறுமை கண்டு எழுந்திடும் வீரத்தை உன்னில் தேடு..!
வளமான வாழ்விற்கு நேர்மையை உன்னில் தேடு..!

பாமரனின் தோள் தூக்கி விடும் பண்பினை உன்னில் தேடு..!
பகட்டான வாழ்வை தொலைக்க தன்னலத்தை..உன்னில் தேடு..!
தாய் தந்தை தெரியாத..,தான் யாரென்று புரியாத 
தளர்ந்த தளிர்க்கு உதவிட கருணையை உன்னில் தேடு...!

உன்னில் தேடியவை உனக்குள்ளே கிடைத்திட்டால்..-இந்த
மண்ணில் நீயும் ஒரு மகாத்மாவே..! உன்னை தொடரும்
சந்ததிகள் நெஞ்சில் நீயும் இதை விதைத்திட்டால்..
நம் தேசம் முழுவதும் இனி..மகாத்மாக்களே..!

எனது சிறு கவிதைகள் - 4


           மணம்

மலர்களின் மனம் அறிகின்ற வேளையில் இந்த மங்கையின் மணம் வீசுகின்றதே..!


உன் நினைவுகள் 

 காலைப் பனி காற்று போல ...உன் நினைவுகள் என்னை தினம் கட்டுண்டு கிடக்கச் செய்கின்றனவே..!
         
                           வார்த்தைகள்

ஒரு நொடி உன் பார்வை எனை தாக்குகிறது. அதில் ஓராயிரம் வார்த்தைகள் நடைபயிலுகிறது...!

 என் விழிகள்

சுவாசிக்க காற்றிருந்தும், சுற்றத்தார் அருகிலிருந்தும்..சுழலுகிறது..
என் விழியிரண்டும்..உன்னைக் காண..

 பசிபிக் கடல்

பசிபிக் கடலாய் இருந்த மனம் என்னவளின்
பார்வையால் பாலைவன ஊற்றாய் மாறியதே.!


இதயம்

பக்கத்தில் நீ வந்தால் பதறுகிறது..இதயம்..- நீ
பார்வையை விலக்கிக் கொண்டால் பரிதவிக்கிறது இதயம்...


இரவல் இடமா.?!..என் இதயம்..?!



இனியவளே..!

உந்தன் கண்ணீரை சுமக்க..
என் கன்னத்திற்கு இடம் கொடு..!
உன் வலிகளை சுமக்க..
என் மார்பிற்கு இடம் கொடு..!

உன் உள்ளத்தை சுமக்க..
என் இதயத்திற்கு இடம் கொடு..!
உன் சோகத்தை சுமக்க
என் தேகத்திற்கு இடம் கொடு..!

உன் பாவங்களை சுமக்க..
என் பாதத்திற்கு இடம் கொடு..!
உன் உடலை சுமக்க..
என் உடலிற்கு இடம் கொடு..!

என்று சொன்னவனே..!
உன்னன்பு உண்மையென்று..
என்னை தந்ததற்கு..என்னுள்
இளைப்பாறி ஏமாற்றிச்சென்றாயே..?-என்
இதயம் இரவலென நினைத்தாயோ.?

அந்த இரவலுக்கு இணையாக..
இன்னொரு துணையை எனக்குள்
நீ கொடுத்தாயோ..?

இறைவா..!
இருவரின் தவறில் உதித்திட்ட ஒரு
உயிரின் பாவத்தின் கணக்கதினை
உரு கொடுக்கும் பெண்ணில் ஏன்
முழுவதுமே இணைத்தாய்..!
அத்தவறின் பிணக்குகளின் பாதியை 
ஆணோடு பிணைத்திருக்ககூடாதா..?
ஆண்களும் அந்த அல்லல் சுமைதனை
அனுபவிக்கக் கூடாதா..?




திருத்த முடியா கவிதை நான்-4 (தொடர் கவிதை –நான்காம் பாகம்)




 
உன்னால் மட்டும் எப்படி முடிகிறதோ..? உன்
இதழோடு புன்னகை பூக்களை பூக்கவிட்டு என்
இதயத்தில் இதமாக இடியை இறக்குகிறாய்..?  
இரத்த நாளங்களை பெயர்த்தெடுத்து அதில்
ஊஞ்சல்கட்டி ஆடுகிறாய்.-என் இதயத்தில்
இரத்தப்பூக்களை பூக்கச்செய்கிறாய்...?

நான் எழுதும் கவிதையை நீ ரசிக்கிறாய்..!
நான் ரசிக்கும் கவிதையாய் நீ இருக்கிறாய்..!என்
கவிதையாய் நானும் கொஞ்சம் மாறக்கூடாதோ..?இந்த
கன்னியும் எனை கொஞ்சம் கொஞ்சக்கூடாதா..?
கொஞ்சும் எண்ணம் உன்னுள் குடி கொண்டதா..?
     
வெளி உலகம் கண்டுவிட்டால் வேதனை..என்று..
வேலி போட்டு நடிக்கின்றாய்..!என்னை
வெளிச்சமிலா நரகத்தில் தள்ளி தினம்
வேதனை பட வைக்கிறாய்..!-என்
வெந்த இதயத்தில் வேல்பாய்ச்சுகிறாய்..!

காதல் கற்றது உன்னிடம் என்பதால் நான்
கேள்விக்கணைகளை தொடுக்கிறேன்..
கேள்விகணைகளை நான் தொடுத்தால்...நீயோ அமைதி
வேள்விகளை தினம் நடத்துகிறாய்...
என்னுள் பல திருத்தங்கள்.. நீ..செய்தாலும்..
உன்னால்..திருத்த முடியா கவிதையாக நான்..
 

அப்பா..! எனக்கு கல்யாணம்..!




பகட்டான வாழ்க்கை..தேடி
பணம் எனும் காகிதம் சேகரிக்க..
பாசத்தை அடகு வைத்து...
பாரினில் வந்து சேர்ந்தேன்..
         
வந்து சேர வாங்கிய பணத்தின்          
வட்டி கட்ட வருடம் ஒன்றானது..
முழுக்கடன் முழுதாய் தீர்க்க
மீண்டும் எனை அடகு வைத்தேன்..
வேலையைப் புதுப்பித்து.
        
அலைபேசி வாழ்க்கை வாழ்ந்து
தொலைந்து போனது..இளமை...
அல்லும்பகலும் அயராது உழைத்து
இதயமும் இரும்பாகிப் போனது.
         
பணமென்ற பிணமொன்றை
தழுவித் தாங்கிக் கொள்ள..
பிணமாகிப்போனேன்...என்
பிள்ளை மனம் கல்லாக
காரணம் நான் ஆனேன்.
          
வாலிபத்தில் வந்தவனின்
இளமைகள் சுரண்டப்பட்டு..
இன்பங்கள் அழிக்கப்பட்டு..
வேலிகட்டி வாழ்கிறேன்..
வெளிநாட்டில்...நானும்..
                                       
போதுமென்று அளவோடு...
புறப்பட யத்தனித்த நேரத்திலே..
அலைபேசியில் அழைக்கிறான்..
ஆசையோடு..அன்பு மகன்...
அப்பா..!எனக்கு கல்யாணம்..!
மறக்காமல் இந்த மாதம்..
பணம் சேர்த்து அனுப்பிடு..! என்று.

பண மரமாகிப் போனெனோ..நான்..?
என் பாசத்தின் விலைதனை
அறிவானோ..அவனும்..?

மீண்டும் தொடருகிறேன்...
மீதமுள்ள நாட்களை...
வாழ்வில் இணைந்த உள்ளங்கள்..
நலமோடு வாழவே..!

எனது சிறு கவிதைகள் -3 ( சோகம் )





 நீ சோகமா..?
மனதின் ஆழத்தில் சோகம் இருந்தால் கவிதை வருமாம்..!
என் மனதின் ஆழத்தில் நீயுள்ளாய்..!
கவிதை அருவியாய் வருகிறது..நீ சோகமா..?

செல்லரிப்பு
செத்தபின்பு செல்லரித்து போகின்ற உடல் இது..
உன்இல்லைசொல்லால்                       
செல்லரிக்க வைத்து விட்டாயே..? என்
உயிர் நீ இருக்கும் போதே...!
           
கலங்கிய மேகமாய்...
கரையோடு அலைபேசும் பேசும் 
காதல் கலங்கியதில்லை என்
கண்களோடு நீ பேசும் மௌனம் மட்டும்..-
கலங்கிய மேகமாய் ஆக்கியதடி..! என் கண்களை..

வானம் பார்த்த பூமி
வானம் பார்த்த பூமியாய் நான் உள்ளேன்...நல்ல
வார்த்தையை நீ மட்டும் உதிர்த்து விட்டால்..
பனி விழுந்த புல்வெளியை போல் என் நெஞ்சம்
பளபளக்கும்...!           

பலூன்
முள்பட்டால் உடைந்துவிடும் பலூன்  போல -உந்தன்
சொல்பட்டதால் உடைந்ததடி..- என் மனது...
                          

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.