இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


காதல் என்பது எது..?


           “காதல்..காதல் காதல்..காதல் போயின் சாதல் சாதல் சாதல்.” இது பாரதியின் மொழி.   
          காதல் எங்கு இருக்கிறதோ அங்கு வாழ்க்கை இருக்கிறதுஇது காந்தியின் கூற்று.
          காமமே காதலின் அடிப்படை காரணம்இது ஓஷோவின் வரி.
      இன்னும் எத்தனையோ கவிஞர்கள்,சான்றோர்கள்,காதலுக்கு பலவித விளக்கம்
    தந்தாலும்..காதல் என்பதை படித்தால் மட்டும் அறிய முடிவதில்லை..உணந்தால் மட்டுமே  
    முடியும்..என்னைப் பொருத்தவரை..காதல் என்பது..
                                         “உள்ளத்திற்குள்  உனக்கு நீயே
                              உருவாக்கிக்கொள்வதல்ல...தானாகவே அது
                                                             உருவாகி கொள்வது தான் ....
                                                             உண்மையான காதல்...
மூளையின் கட்டளை மூலம் வரும் உணர்ச்சிகளின் செயல்பாடுஅல்ல.. இது  
இதயத்தில் ஏற்படும் உணர்வு..அது தானாகவே உள்ளத்திற்குள் உருவாகும்..அந்த காதல் 
உனக்குள்தோன்றினால் ஏற்படும் மாற்றம் பற்றி கவிபேரரசு ஒரு கவிதை எழுதி  
இருந்தார்..அந்தகவிதை போலவே..எனக்குள் ஏற்பட்ட சில வரிகள்.. காதல் வந்தால்..
                  கண்திறந்து கனவு காண்பாய்..!
                         மண் சாலையில் மிதந்து செல்வாய்..!
                                               உலகம் கவிதையாய்  மாறும்..! - உன்
                                                உள்ளம்  சிறகாக மாறும்..
கல்லும் சிலையாய் மாறும்..!- உன்
                                               சொல்லில் இனிமை சேரும்..!                    
பூக்களின் மென்மை புரியும்..!
பட்டுப்பூச்சி ஓவியமாய் தெரியும்..!
நெஞ்சில் நடுவில் இன்ப பூகம்பம் பூக்கும்.
இதயத்தின் துடிப்பு இரட்டிபாக்கும்..!
வேதனைகள்  நீ மறப்பாய்..!பெற்றோர்
போதனை யும்  நீ துறப்பாய்..!         
                                                 உலகம் உன்னைச் சுற்றும்..! உன் 
உளறல்கள் உனக்கு பிடிக்கும்.!.
நண்பர்கள் தொலைந்து போவார்கள்..!
நாளை என்பது  தென்படாது..! 
நடுஇரவில் உன்தூக்கம் போகும்..! உன்
நடையில் பெண்மை தவழும்..
கணினி உந்தன் தோழன் ஆகும்..
அலைபேசி உன் உயிராகும்.
                  மொத்தத்தில் நீ அழகாவாய்... 
                                            காதலித்து பார்...காதலை..”
   இந்த உணர்வுகள் உனக்குள் யார் மூலம் முதலில் உண்டானதோ..? அது தான்  
   அவர்கள் மேல் உண்டான உணர்பூர்ணமான உண்மைக்காதல்..!
   இந்த காதல் பற்றி இன்னும் முழுமையாக சொல்வதென்றால்..

                 உடலின் உணர்ச்சிகளை உணர்ந்து புரிவதல்ல.
                 உள்ளத்தின் உணர்வுகளை..அறிந்து வருவது..
                 உடல் அழிந்து,உதிரம் நீர்த்துப்போனாலும்..
                 உண்மை காதல் உணர்விழந்து போகாது.
                 வாழ்வின் ஒருபகுதியில் காதல் நுழைந்தாலும்
                 நேசத்தின் மிகுதியை என்றும்..வழங்கிடும்.
                 பாசத்தின் ஊற்றாய் அது மாறி..வாழ்வின் பாதை
                 எங்கும் பூவைத் தூவிடும்..வாழ்வை வசந்தமாக்கிடும்.

   மேலே நான் சொன்ன காதல் எனும் உணர்வில் உண்டான எதார்த்தமான   
   வரிகளின்,வலிகளின் உள்ளடக்கிய தொகுப்பே..இந்த கவிஞனின் காதலி.
   சின்னச்சின்ன கவிதைவரிகளில் வசந்தமாய் தொடங்கி, நீண்டு இறுதியில்
   இன்ப வலியோடு முடிந்திடும்..இந்த கவிஞனின் காதலி.      

   என் முதல் காதல் கவிதையின் தொகுப்பான கவிஞனின் காதலி.யை..எனக்கு
                       உயிர்கொடுத்த தந்தைக்கும்.. நன்றாய்..
                        உருகொடுத்த தாயுக்கும்..
                        தமிழ்கொடுத்த தமிழாசிரியர்களுக்கும்..
                        உற்சாகம்கொடுத்த உறவினர்களுக்கும்..
                        பாராட்டுதந்த நண்பர்களுக்கும்..
                        காதல்தந்த என் அன்பு கண்மணிக்கும்..
                        ஏக்கம்தந்த சமுதாயத்திற்கும்..
                      சந்தர்ப்பம்தந்த ஈகரை வலைத்தளத்திற்கும்..
                        வாழ்வுதந்த தமிழ்நாட்டிற்கும் ..எனக்கு
                  “வளமை”தந்து கொண்டிருக்கும்..சிங்கைக்கும்..
                  “அன்பால்”உலகை இயக்கிக்கொண்டிருக்கும்..
                  “காதல்”ஐ காற்றாய் சுவாசிக்கும்..அனைவருக்கும்..
                  சமர்ப்பணம்.                                                                                                                                        
                                                           
                                                                 அன்புடன்,
                         -தேனிசூர்யாபாஸ்கரன்.
                                        கைபேசி எண்: +65-82692274    

இந்த தொகுப்பு அடங்கிய புத்தகம் வருகின்ற சென்னை புத்தகக்கண்காட்சியில் மலர்க்கண்ணன் பதிப்பகம் ஸ்டாலில் கிடைக்கும் என்பதை அன்போடு தெரிவிக்கிறேன்..                        
                   

டைட்டானிக் காதல்


நினைவுகளும் கனவுகளும்


கற்பனையா என் கவிதை..?


வெட்கத்தில் வெள்ளை ரோஜா


தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.