இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


திருத்த முடியா கவிதை நான் -1

          

 
 தொலைதூரம் சென்றாலும்,எங்கோ..
 தொலைந்து நான் போனாலும்,உனை
 தொடரும் நிழலாய்...நிஜமாய்..
 தூர இருந்து துரத்துகிறேன்...உனை..
 தெரிகிறேனா..நான்..உன் நிழலில் நிஜமாய்..?

 கவிதையில் சொன்ன என் இனிய 
 காதலை..பொய்மை சொல்லுபவை
 கவிதைஎன தவறாகப் புரிந்து கொள்வாய்..என
 அலைவளியாய்..ஒலியாய்..உரைக்கிறேன்..என்  
 காதல் வலியை..நீயும் உணர்ந்தாயா..? 
         
தூயஅன்பு நீ அளித்தும் அவள் உனை விட்டு
 தூரம் சென்றால்..!? அவளை விட்டு விலகிவிடுங்கள்..!
 உன் அன்பு உண்மையானால் மீண்டும்அவள்
 உன் தோளில் சாய்வாள்.."எங்கோ படித்ததுண்டு..

 உனை விட்டு நானும் தூரம் செல்கிறேன்..
 உனக்கு என் தூயன்பை பகிர்ந்து விட்டு..
 உனக்கு..இப்போதாவது தோன்றுகிறதா..?
 என் தோள் சாய்ந்து கொள்ள...?

 கோபப்பட்டு நீ சொன்ன ஒரு சொல்லால்..தினம்
 சாபபட்டு போனவன் நான்.- உனக்கு 
 சாபங்கள் தருபவனல்ல..-.உன்னால்
 சாவைத்தேடுபவன் அல்ல.
         
 இந்த வாழ்வின்..
 சாப விமோனசம் தேடி...உனை
 நாடி வந்தவன் நானடி..என்னை
 தேடி நீயும் சில நேரம் தொலைந்ததுண்டா..?
 என்னை தொலைத்த இடம் நீ அறிந்ததுண்டா..?
                    
                        (சோகம் தொடரும்..)


0 கருத்துரைகள்:

Post a Comment

உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.